காஜல் அகர்வால், ரெஜினா, ரைசா உள்ளிட்ட 5 நடிகைகள் நடிக்கும் 'கருங்காப்பியம்' படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு!

முன்னணி நடிகைகளான காஜல் அகர்வால், ரெஜினா கசாண்ட்ரா, ஜனனி, ரைசா வில்சன் உள்ளிட்ட ஐந்து நடிகைகள், கதையின் நாயகிகளாக நடித்திருக்கும் ‘கருங்காப்பியம்’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் தற்போது வெளியிடப்பட்டுள்ளது.

‘யாமிருக்க பயமே’, ‘கவலை வேண்டாம்’, ‘காட்டேரி’ ஆகிய படங்களை இயக்கிய இயக்குனர் டீகே இயக்கத்தில் தயாராகியிருக்கும் புதிய திரைப்படம் ‘கருங்காப்பியம்’. இந்த படத்தில்  நடிகைகள் காஜல் அகர்வால், ரெஜினா கசாண்ட்ரா, ஜனனி, ரைசா வில்சன் ஆகியோர் கதையின் நாயகிகளாக நடிக்க, இவர்களுடன் நடிகர்கள் கலையரசன், யோகி பாபு, கருணாகரன், ஜான் விஜய், ஷா ரா, ‘லொள்ளு சபா’ மனோகர், விஜே பார்வதி, விஜே ஆஷிக் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். 

இவர்களுடன் ஈரான் நாட்டு நடிகையான நொய்ரிகா நாயகியாக அறிமுகமாகிறார். விக்கி ஒளிப்பதிவு செய்யும் இந்தப் படத்திற்கு எஸ். என். பிரசாத் இசையமைக்கிறார். விஜய் படத்தைத் தொகுக்க, செந்தில் ராகவன் கலை இயக்கத்தை கவனித்திருக்கிறார். சண்டைக்காட்சிகளை அசோக் அமைத்திருக்கிறார். பெண்களை மையப்படுத்தி உருவாகி இருக்கும் ‘கருங்காப்பியம்’ படத்தை வெற்றிவேல் டாக்கீஸ், பேவ் (PAVE) என்டர்டெய்ன்மென்ட்ஸ் மற்றும் ஏ. பி. இன்டர்நேஷனல் ஆகிய பட தயாரிப்பு நிறுவனங்கள் இணைந்து தயாரித்திருக்கிறது. 

இப்படத்தின் இறுதிகட்ட பணிகள்  நிறைவடையும் தறுவாயில் உள்ளது. இந்நிலையில் ‘கருங்காப்பியம்’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் தற்போது வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இந்த படம் ஐந்து நடிகைகளுக்கும் முக்கியத்துவம் கொடுத்து எடுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

  • kajal agarwal
  • tamil cinema
  • kollywood
  • actress
  • first look
  • karungapiyam


Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.