சீனாவுக்கு எதிரான மசோதா அமெரிக்க பார்லி., ஒப்புதல்| Dinamalar

வாஷிங்டன்:இந்திய – பசிபிக் கடல் பிராந்தியத்தில் சீனாவின் சவாலை சமாளிக்க, தென்கிழக்கு ஆசிய நாடுகள் உடனான கூட்டுறவை வலுப்படுத்தும் மசோதாவிற்கு, அமெரிக்க பார்லி., குழு ஒப்புதல் அளித்துஉள்ளது.
இந்திய – பசிபிக் கடல் பிராந்தியத்தில் தெற்கு மற்றும் கிழக்கு சீன கடல் பகுதிக்கு சீனா சொந்தம் கொண்டாடுகிறது. செயற்கைத் தீவுகளை உருவாக்கி, ராணுவ தளங்களை அமைத்து வருகிறது. இதற்கு, தென்கிழக்கு ஆசிய நாடுகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன.

தென்பசிபிக் கடல் பிராந்தியத்தில் சீனாவின் அத்துமீறலை சமாளிக்கும் நோக்கில் அமெரிக்கா, இந்தியா, ஜப்பான், ஆஸ்திரேலியா ஆகிய நாடுகள் இணைந்து, ‘குவாட்’ என்ற அமைப்பை ஏற்படுத்திஉள்ளன.இந்த அமைப்பிற்கான நிதி ஒதுக்கீடு உட்பட தென்கிழக்கு நாடுகள் உடனான கூட்டுறவை வலுப்படுத்த வகை செய்யும், ‘ஈகிள்’ மசோதாவுக்கு, அமெரிக்க பார்லி., வெளியுறவுகுழு ஒப்புதல் வழங்கிஉள்ளது.

இது குறித்து பார்லி., உறுப்பினர் ஜோக்குன் காஸ்ட்ரோ கூறியதாவது:மத்திய கிழக்கு நாடுகளுக்கு ஏவுகணை மற்றும் அணுஆயுத தொழில்நுட்ப உதவிகளை சீனாவழங்குகிறது. இதை தடுக்க, ஆயுதங்கள் அழிப்பு சட்டத்தின் முக்கிய விதிமுறைகள் மசோதாவில் சேர்க்கப்பட்டுள்ளன.இவ்வாறு அவர்கூறினார்.

Advertisement

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.