`தமிழ்நாட்டிற்கு நீட் தேர்வு தேவையில்லை!' – கருத்துக் கணிப்பில் 87% பேர் கருத்து

`நீட் தேர்வு தமிழகத்துக்குத் தேவையா?’ என்ற தலைப்பில் நடத்தப்பட்ட கருத்துக் கணிப்பில் பங்கேற்ற பெரும்பாலான மக்கள், நீட் தேவையில்லை என்று பதிவு செய்துள்ளதாகக் கல்விப் பாதுகாப்புக் கூட்டமைப்பினர் தெரிவித்துள்ளனர்.

நீட் தேர்வு

தமிழகத்தில் ஆட்சி மாற்றம் ஏற்பட்ட பின்பும்
மருத்துவம் படிக்க விரும்பும் மாணவர்களுக்கு நீட் தேர்வு தேவை, தேவையில்லை என்ற விவாதம் அரசியல் தலைவர்களாலும், கல்வியாளர்களாலும் தொடர்ந்து நடத்தப்பட்டு வருகிறது.

இந்நிலையில், `நீட் தேர்வு தமிழ்நாட்டிற்குத் தேவையா?’ என்ற தலைப்பில் `கல்விப் பாதுகாப்புக் கூட்டமைப்பு – தமிழ்நாடு & புதுச்சேரி’ நடத்திய கருத்துக் கணிப்பின் முடிவு வெளியிடப்பட்டது.

Medical Studies (Representational Image)

Also Read: செப்டம்பர் 12-ல் நீட் தேர்வு: `மாணவர்கள் தயாராக இருக்க வேண்டும்!’ – அமைச்சர் மா.சுப்பிரமணியன்

மத்திய அரசின் தேசியக் கல்விக்கொள்கையிலுள்ள பாதகமான விஷயங்களை பரப்புரை செய்வதற்காக கல்வியாளர்கள், மாணவர் அமைப்புகள், மனித உரிமை அமைப்புகள், பெண்கள், பழங்குடியினர் நல அமைப்புகள், வழக்கறிஞர்கள், மருத்துவர்கள், அரசியல் அமைப்புகளைச் சேர்ந்தவர்களின் பங்கேற்புடன் தொடங்கப்பட்ட `கல்விப் பாதுகாப்புக் கூட்டமைப்பு – தமிழ்நாடு & புதுச்சேரி’, கல்வித்துறை சம்பந்தமாக பல்வேறு கருத்தரங்குகளை கடந்த இரண்டு வருடங்களாக நடத்தி வருகிறது.

யார் யார் கலந்துகொள்ளலாம் என்ற விதிமுறைகளை உருவாக்கி, கூகுள் மூலம் கடந்த மாதம் 28-ம் தேதி தொடங்கி இந்த மாதம் 14-ம் தேதி வரை இக்கூட்டமைபினர் நடத்திய கருத்துக் கணிப்பின் இணைப்பு, சமூக ஊடகங்களில் பகிரப்பட்டது.

கல்வியாளர் வசந்திதேவி

இதில் 42,000 பொதுமக்கள் பங்கேற்று தங்கள் கருத்தை பதிவு செய்துள்ள நிலையில், கருத்துக் கணிப்பின் முடிவை இன்று காலை இணையவழிக் கூட்டம் மூலம் மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தின் முன்னாள் துணைவேந்தர் வசந்திதேவி வெளியிட, சென்னை உயர்நீதிமன்ற முன்னாள் நீதிபதி ஹரிபரந்தாமன் பெற்றுக் கொண்டார்.

கருத்துக்கணிப்பில் 87.1 சதவிகிதம் பேர் நீட் தேர்வை விரும்பவில்லை என்றும், 11.9 சதவிகிதம் பேர் விரும்புவதாகவும், 1 சதவிகிதம் பேர் கருத்து தெரிவிக்கவில்லை என்றும் கல்வி பாதுகாப்பு கூட்டமைப்பினர் தெரிவித்துள்ளனர்.

medical studies (Representational Image)

Also Read: நீட் தேர்வு விவகாரம் – மாணவர்கள் தெரிந்துகொள்ள வேண்டிய யதார்த்தம் என்ன?

நீட் தேர்வால் ஏற்படும் பாதிப்புகள் பற்றியும் கருத்துக் கணிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மனித உரிமை செயற்பாட்டாளர் ஹென்றி திபேன், செயற்பாட்டாளர் தியாகு ஆகியோர் ஆலோசனையுடன் நடத்தப்பட்ட இக்கருத்து கணிப்பை கல்விப் பாதுகாப்புக் கூட்டமைப்பு சார்பில் கண.குறிஞ்சி, வழக்கறிஞர் பிரிட்டோ, கணேசன் ஒருங்கிணைத்தார்கள்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.