மலேசியாவில் கரோனா ஊரடங்கால் வீட்டிலிருந்தபடி வெள்ளை கொடி காட்டுவோருக்கு உதவும் தன்னார்வலர்கள்

மலேசியாவில் கரோனா ஊரடங்கால் சிரமப்படுவோர் உதவி கோரி தங்கள் வீட்டுக்கு வெளியே வெள்ளைக் கொடி வைக்கின்றனர்.

தென்கிழக்கு ஆசியாவில் கரோனா வைரஸ் தொற்றால் மிகவும் பாதிக்கப்பட்ட நாடுகளில் 3-வது இடத்தில் மலேசியா உள்ளது. கரோனா தொற்றை கட்டுப்படுத்தஇங்கு கடந்த ஜூன் 1 முதல் ஊரடங்குகட்டுப்பாடுகள் அமலில் உள்ளன. இந்நிலையில் தலைநகர் கோலாலம்பூருக்கு அருகில் உள்ள செலங்கர் மாநிலம், பெட்டாலிங் ஜயா மாவட்டத்தை சேர்ந்த ஹதீஜா நீமத் என்ற பெண்மணி, ஊரடங்கு நெருக்கடியை சமாளிக்க முடியாமல், வெளி நபர்களிடம் உதவி கேட்டு, தனது வீட்டு ஜன்னலுக்கு வெளியே வெள்ளைத் துணி ஒன்றை பறக்கவிட்டார். இதைப் பார்த்த பக்கத்து வீட்டுக்காரர் ஒருவர் சிறிது நேரத்திலேயே ஹதீஜாவுக்கு உணவும் பிற பொருட்களும் கொடுத்து உதவினார்.

இதன் தொடர்ச்சியாக, உணவு, மருந்துஉள்ளிட்ட அவசரத் தேவை உடையவர்கள் தங்கள் வீட்டுக்கு வெளியே வெள்ளைக் கொடி வைக்கும்படி சமூக ஊடகங்களில் கேட்டுக்கொள்ளப்பட்டது. மேலும் இந்த வீடுகளை அடையாளம் கண்டு உதவும்படியும் கோரிக்கை வைக்கப்பட்டது.

சமூக ஊடகங்களில் வேகம் அடைந்த இந்த வெள்ளைக் கொடி பிரச்சாரத்தின் பலனாக, துயரத்தில் இருப்பவர்களுக்கு அருகில் வசிப்பவர்களுக்கும் தன்னார்வலர்களும் உதவுகின்றனர். தொழிலதிபர்கள், அரசியல்வாதிகள், பிரபலங்கள் என பலரும் இதற்கு நன்கொடை வழங்குகின்றனர்.

இதற்கு தொடக்கப் புள்ளியாக இருந்த ஹதீஜா நீமத் கூறும்போது, “அன்று எனது வெள்ளைக் கொடி அழைப்பை ஏற்று வெளியாட்கள் தான் உதவிக்கு வந்துள்ளார்கள் என நான் நினைத்தேன். ஆனால் அருகில் வசிப்பவர்களே உதவிக்கு வந்தனர். ஒருவர் வெள்ளைக் கொடியை வைக்கும்போது, அதை நாம் கவனத்தில் கொள்வது அவசியம் என்று கூறிய அவர்கள், தாராள உதவிகளால் எங்களை வியப்பில் ஆழ்த்தினர்” என்றார்.

இது தொடர்பாக சட்டமன்ற உறுப்பினர் மரியா சின் அப்துல்லா கூறும்போது, “வெள்ளைக் கொடியை காண்பிக்க மிகுந்த தைரியம் தேவை. ஏனென்றால் உங்களால் பிரச்சினையை சமாளிக்க முடியவில்லை என்ற உண்மையை இது எல்லோரிடமும் கூறுகிறது. இதை நான் நேர்மறையாகவே எடுத்துக்கொள்கிறேன். உண்மையில் இதுதான் நாட்டுக்கு தேவைப்படும் ஒன்றாகும். ஏனென்றால் நாங்கள்ஒவ்வொரிடமும் வந்து உங்களுக்கு உதவிவேண்டுமா என கேட்க முடியாது. உங்களுக்கு உதவி தேவை என்பதை நீங்கள் வெளிப்படுத்துகிறீர்கள். நாங்கள் உங்களுக்கு உதவ முன்வருகிறோம்” என்றார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.