மீண்டும் லாக்டவுன், அமலாகும் கட்டுப்பாடுகள்; விடாமல் துரத்தும் கொரோனா!

ஹைலைட்ஸ்:

அபுதாபியில் வரும் 19ஆம் தேதி முதல் மீண்டும் கட்டுப்பாடுகள்
நள்ளிரவு முதல் காலை 5 மணி வரை ஊரடங்கு அமலில் இருக்கும்
உணவகங்கள், தேநீர் கடைகள், அழகு நிலையங்களில் 50% மட்டுமே அனுமதி

அபுதாபியில் பொதுமக்கள் நலன் கருதியும்,
கொரோனா
பரவலைக் கட்டுப்படுத்தவும் வரும் 19ஆம் தேதி முதல் பல்வேறு
கட்டுப்பாடுகள்
அமல்படுத்தப்படும் என்று அந்நாட்டு அரசு அறிவித்துள்ளது. அதன்படி, முடிந்தவரை பொதுமக்கள் வீட்டிலேயே இருக்க வேண்டும். மிக அவசியத் தேவையாக இருந்தால் மட்டும் வெளியே செல்லுங்கள்.

அதிகாலை நேரத்தில் ஊரடங்கு

தினசரி நள்ளிரவு முதல் காலை 5 மணி வரை கட்டுப்பாடுகள் அமலில் இருக்கும். இந்த நேரத்தில் எந்தவொரு வாகனப் போக்குவரத்திற்கும், பொதுமக்கள் நடமாட்டத்திற்கும் அனுமதியில்லை. அத்தியாவசியப் பொருட்களை கொண்டு செல்ல தடையில்லை. பொது மற்றும் தனியார் கடற்கரைகள், பூங்காக்கள், நீச்சல் குளங்கள்,

ஆகஸ்ட் முதல் 3வது டோஸ் தடுப்பூசி – அரசு அதிரடி அறிவிப்பு!

பொது இடங்களில் கட்டுப்பாடுகள்

உணவகங்கள், தேநீர் கடைகள், உடற்பயிற்சி கூடங்கள், அழகு நிலையங்கள், பேருந்துகள் உள்ளிட்டவை 50 சதவீத வாடிக்கையாளர்களுடன் மட்டும் இயங்கும். மால்கள் 40 சதவீத வாடிக்கையாளர்கள் உடனும், சினிமா ஹால்கள் 30 சதவீத பார்வையாளர்கள் உடனும் செயல்படும். 5 நபர்கள் அமரும் டாக்ஸிகளில் அதிகபட்சமாக 3 பேரும், 7 நபர்கள் அமரும் டாக்ஸிகளில் 4 பேரும் அமர்ந்து செல்லலாம்.

கொரோனா நெகடிவ் முடிவுகள் அவசியம்

வெளியூர்களில் இருந்து வருகை புரிவோர் 48 மணி நேரத்திற்குள் எடுக்கப்பட்ட
நெகடிவ் பிசிஆர்
முடிவுகள் அல்லது 24 மணி நேரத்திற்குள் எடுக்கப்பட்ட நெகடிவ் டிபிஐ முடிவுகளை வைத்திருக்க வேண்டும். அபுதாபிக்கு வந்த 4வது நாள் மற்றும் 8வது நாளில் மீண்டும் பரிசோதனைகளை செய்து கொள்ள வேண்டும்.

கேரளாவில் வார இறுதி ஊரடங்கு !

இத்தகைய நடைமுறை
தடுப்பூசி
போட்டுக் கொண்ட மற்றும் தடுப்பூசி போடாத நபர்களுக்கும் பொருந்தும். ஒருவேளை பரிசோதனைகளை எடுக்கவில்லை சம்பந்தப்பட்ட நபர்களுக்கு அபராதம் விதிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.