விக்கி பீடியாவை நம்பாதீங்க!: நிறுவனரே எச்சரிக்கை| Dinamalar

வாஷிங்டன்: விக்கிபீடியாவை நம்பாதீங்க என அதன் நிறுவனரே எச்சரிக்கை விடுத்துள்ளார்.

இது குறித்து கூறப்படுவதாவது: தகவல் அறியும் ஆர்வலர்கள் தங்களுக்கு தேவைப்படும் தகவல்களை முழுமையாக கிடைப்பதற்காக தேடுவது விக்கிபீடியாவைத்தான். இந்த விக்கிபீடியா கடந்த 2001 ம்ஆண்டில் லாரி சாங்கர் என்பவர் ஜிம்மி வேல்ஸ் என்பவருடன் இணைந்து உருவாக்கினார்.

தற்போது அவரே விக்கிபீடியாவை யாரும் நம்பக்கூடாது என கூறி உள்ளார். இது குறித்து அவர் கூறுகையில் இடது சாரி தன்னார்வலரகள் விக்கிபீடியா தளத்தை கையகப்படுத்தி உள்ளதுடன் தங்களது நிகழ்ச்சிக்கு பொருந்தாத ஆதாரங்களை போலி செய்தியாக எழுதுகின்றனர். இதனால் விக்கிபீடியாவை தகவலின் ஆதாரமாக நம்ப முடியாது என கூறி உள்ளார்.

மேலும் அவர் கூறுகையில் தற்போதைய அமெரிக்க அதிபர் ஜோ பைடன் மகன் ஹண்டர் பைடன். இவர்2014 ம் ஆண்டு முதல் 2019ம் ஆணடு வரையில் உக்ரைன் நாட்டின் எரிசக்தி நிறுவனம் ஒன்றில் எந்த ஒரு முன் அனுபவமும் இல்லாமல் ஆண்டு ஒன்றிற்கு 6 லட்சம் டாலர் சம்பளத்தில் பணியாற்ற நியமனம் செய்யப்பட்டதாக கூறப்படுகிறது.

இது குறித்து விசாரணை நடத்த தனியார் நிறுவனம் மீது உக்ரேனிய வக்கீல் ஜெனரல் விக்டர் ஷோகின் என்பவர் வழக்கு தொடர்ந்தார். ஆனால் ஷோகினை நீக்க வேண்டும் என்று ஜோபைடன் உக்ரேனிய பார்லி.,க்கு கடந்த 2015ம் ஆண்டில் அழுத்தம் கொடுத்ததாக கூறப்படுகிறது.

இதனிடையே ஹண்டர் பைடனின் லேப்டாப் கம்ப்யூட்டரில் உள்ள தகவல்கள் பத்திரிகைகளில் கசிய துவங்கின. இதனை மறுத்த ஜனநாயக கட்சியினர் மற்றும் அதிபர் ஜோபைடன் இது ரஷ்யா வின் தவறான தகவல் பிரசாரத்தின் ஒரு பகுதி என கூறினர்.

அதே நேரத்தில் அக்டோபர் மாதத்தில் தி நியூயார்க் போஸ்ட் பத்திரிக்கைகளில் இதுகுறித்த தகவல் வெளிவந்தது.அதில் டிரம்பின் தனிப்பட்ட வக்கீல் ரூடி கியுலியானியிடம் இருந்து பெறப்பட்டது என அந்த பத்திரிக்கை தெரிவித்து இருந்தது.

முன்னதாக டிரம்ப் மற்றும் பிரதிநிதிகள் சபையால் குற்றம் சுமத்தப்பட்ட போது ஜோபைடன் ஜனாதிபதியாக வெல்லும் வாய்ப்புகளை முறியடிக்க முயற்சிப்பதாக ஊடகங்கள் பைடனுக்கு ஆதரவளித்தன.

latest tamil news

இருப்பினும் அதிபர் தேர்தலில் ஜோ பைடன் வெற்றிபெற்றார். மேலும் அதிபர் ஜோ பைடன் மற்றும் அவரது மகன் ஹண்டர் பைடன் ஆகியோர் தங்கள் மீதான குற்றசாட்டை மறுத்தனர். இதனிடயே ஜனநாயக ஆதரவாளர்களால் அவர்கள் விரும்பாத உள்ளடக்கத்தை நீக்குகின்றனர்.இதன் காரணமாக விக்கிபீடியாவை நம்பாதீங்க என லாரி சாங்கர் கூறி உள்ளார்.

Advertisement

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.