3 தேசிய விருது வென்ற பிரபல நடிகை மாரடைப்பால் மரணம்..! அதிர்ச்சியில் திரையுலகினர்!

பாலிவுட் திரையுலகின் மூத்த நடிகை சுரேகா சிக்ரி, இன்று காலை 8 :30 மணியளவில், மாரடைப்பு காரணமாக உயிரிழந்துள்ளார். இவருக்கு வயது  75. இவரது மரணம் பாலிவுட் திரையுலகை சேர்ந்த பிரபலங்களை அதிர்ச்சியடைய செய்துள்ளது.

சமீபத்தில் தான் பாலிவுட் திரையுலகின் ஈடு இணையற்ற நடிகர் திலீப் குமார் மரணமடைந்தார். இவரது மறைவுக்கு பிரதமர் மோடி, தமிழக முதல்வர் ஸ்டாலின், உட்பட பல அரசியல் தலைவர்கள், பாலிவுட் மற்றும் கோலிவுட் பிரபலங்கள் தங்களுடைய இரங்கலை தெரிவித்தனர். பல பிரபலங்கள் நேரில் சென்றும் அஞ்சலி செலுத்தினர். இவரது மறைவில் இருந்தே… இன்னும் பிரபலங்கள் மீளாத நிலையில், மற்றொரு மரணம் பாலிவுட் திரையுலகினரை அதிர்ச்சியடைய வைத்துள்ளது.

மூன்று தேசிய விருதை பெற்ற பிரபலமான, சுரேகா சிக்ரி  இன்று காலை மாரடைப்பால் உயிரிழந்துள்ளார். இவர் கடந்த 2018 ஆம் ஆண்டில் மகாபலேஷ்வரில் ஒரு தொலைக்காட்சி தொடரின் படப்பிடிப்பில் கலந்து கொண்ட போது, மூளை பக்கவாதத்திற்கு  ஆளானார். படப்பிடிப்பின் போது கீழே விழுந்ததில் அவருக்கு தலையில் பலமான காயம் ஏற்பட்டது. இதுவே இவருக்கு பக்கவாதம் ஏற்பட காரணம் என கூறப்படுகிறது.

பின்னர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, தனி செவிலியரின் தீவிர கவனிப்பில் இருந்து அதில் இருந்து மீண்டார். பின்னர் தன்னுடைய குடும்பத்தினருடன் வசித்து வந்த சுரேகா சிக்ரிக்கு இன்று திடீர் என மூச்சு திணறல் ஏற்பட்டு, காலை 8 :30 மணிக்கு மாரடைப்பு காரணமாக உயிரிழந்தார். இவரது மறைவை தொடர்ந்து பலர் தங்களது இரங்கலை தெரிவித்து வருகிறார்கள்.

சுரேகா சிக்ரி இந்திய நாடக, திரைப்பட மற்றும் தொலைக்காட்சி துறையில் முக்கிய பங்கு வகித்தவர். 1978 ஆம் ஆண்டில் கிஸ்ஸா குர்சி கா என்ற அரசியல் நாடகம் இவரை மிகவும் பிரபலமடைய செய்தது. பின்னர் பல திரைப்படங்களில் நடித்து தேசிய விருதுகளையும் பெற்றுள்ளார். குறிப்பாக கடந்த 2019 ஆம் ஆண்டில், ஆயுஷ்மான் குர்ரானா, நீனா குப்தா, கஜ்ராஜ் ராவ் மற்றும் சன்யா மல்ஹோத்ரா ஆகியோருடன் இணைந்து நடித்த ‘பாதாய் ஹோ’ படத்தில் பாட்டியாக நடித்து தன்னுடைய துறுப்பான நடிப்பால் அனைவரையும் ஆச்சர்யப்படுத்தினார். இந்த படத்திற்காக, சிறந்த துணை நடிகைக்கான தேசிய திரைப்பட விருதை வென்றார். இது அவரது மூன்றாவது தேசிய திரைப்பட விருது ஆகும். முன்னதாக, அவர் தமாஸ் மற்றும் மம்மோ ஆகிய படங்களுக்கும் தேசிய வித்ததை பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. 

அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார் ஏட்ரியல் ஃபைப்ரிலேஷன், இஸ்கிமிக் இதய நோய், பெருமூளை விபத்து. அவரது மறைவு செய்தி அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. மூத்த நட்சத்திரம் 2020 செப்டம்பரில் மூளை பக்கவாதத்தால் பாதிக்கப்பட்டு மீண்டும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

  • surekha sikiri
  • actress
  • bollywood
  • serial actress
  • pass away
  • heart attack

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.