அணுசக்தி ஒப்பந்த பேச்சுவார்த்தையை தாமதப்படுத்துகிறது; ஈரானுக்கு அமெரிக்கா கடும் கண்டனம்

அதேபோல் அமெரிக்கா மற்றும் ஈரான் இடையிலான மறைமுக அணுசக்தி பேச்சுவார்த்தையின் முன்னோட்டமாக கைதிகள் பரிமாற்றம் தொடர்பாக இரு நாடுகளும் பேச்சுவார்த்தை தொடங்கியது. இந்த சூழலில் ஈரான் அதிபர் தேர்தலையொட்டி கடந்த மாதம் அணுசக்தி ஒப்பந்த பேச்சுவார்த்தை மற்றும் கைதிகள் பரிமாற்ற பேச்சுவார்த்தை தற்காலிகமாக நிறுத்தப்பட்டன. இந்த நிலையில் ஈரானின் புதிய அதிபர் இப்ராகிம் ரைசி ஆகஸ்டு மாதம் பதவியேற்ற பின்னரே, நிறுத்திவைக்கப்பட்ட பேச்சுவார்த்தைகள் மீண்டும் தொடங்கும் என ஈரான் அண்மையில் அறிவித்தது. ஈரானின் இந்த அறிவிப்புக்கு அமெரிக்கா கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து அமெரிக்க வெளியுறவு அமைச்சகத்தின் செய்தி தொடர்பாளர் நெட் பிரைஸ் கூறுகையில், ‘‘ஈரானின் இந்த அறிவிப்பு, அணுசக்தி ஒப்பந்தத்தின் நிபந்தனைகளுக்கு மீண்டும் திரும்புவதற்கான முட்டுக்கட்டைக்கான காரணத்தை திசை திருப்பும் ஒரு மூர்க்கத்தனமான முயற்சி. இதன் மூலம் அணுசக்தி ஒப்பந்த பேச்சுவார்த்தையை ஈரான் வேண்டுமென்றே தாமதப்படுத்துகிறது. ஈரான் ஒரு மனிதாபிமான சைகை செய்வதில் உண்மையிலேயே அக்கறை கொண்டிருந்தால், அந்த நாடு அமெரிக்க கைதிகளை உடனடியாக விடுவிக்கும்’’ என கூறினார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.