அதிகாரியால் ஏற்பட்ட இழப்பு, போலி பதிவு விவகாரம் நிலுவையில் உள்ள ஆவணங்கள் தொடர்பாக வாரத்தில் ஒருநாள் மாவட்ட பதிவாளர்களிடம் விசாரணை

* பதிவு தினத்தன்றே ஆவணத்தை திருப்பி தருவது குறித்தும் கேட்கிறார்* பதிவுத்துறை ஐஜி சிவன் அருள் அதிரடி நடவடிக்கைசென்னை: தமிழக அரசின் பதிவுத்துறையில் பல்வேறு அதிரடி நடவடிக்கை மூலம் சீர்திருத்தம் ேமற்கொள்ளப்பட்டு வருகிறது. குறிப்பாக, அமைச்சர், செயலாளர், ஐஜி ஆகியோர் ஒவ்வொரு சார்பதிவாளர் அலுவலகங்களுக்கும் நேரில் சென்று ஆய்வு செய்து வருகின்றனர். இந்த ஆய்வில் குறைகள் கண்டறியப்பட்டால் சார்பதிவாளர் மற்றும் ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. தொடர்ந்து, அனைத்து மண்டல டிஐஜிக்களுக்கு ஆய்வு செய்ய அமைச்சர் அறிவுரை வழங்கியுள்ளார். அதன்படி ஒவ்வொரு வாரமும் இரண்டு முதல் 4 அலுவலகங்கள் வரை நேரில் ஆய்வு செய்ய மண்டல ஐஜிக்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. இந்த நிலையில், பதிவுத்துறை தலைவர் சிவன் அருள் ஒவ்வொரு வாரமும் செவ்வாய்கிழமைதோறும், மாவட்ட பதிவாளர்களுடன் சீராய்வு கூட்டம் நடத்துகிறார்.இது குறித்து பதிவுத்துறை ஐஜி சிவன் அருள் அனைத்து மாவட்ட பதிவாளர்களுக்கு சுற்றறிக்கை ஒன்றை அனுப்பியுள்ளார். பதிவுத்துறை தலைவர், ஒவ்வொரு வாரமும் செவ்வாய்கிழமை நண்பகல் 12 மணி முதல் 1 மணி வரை காணொலி காட்சி மூலம் அனைத்து நிர்வாக மாவட்ட பதிவாளர்கள் ஆகியோரது பணி சீராய்வு மேற்கொள்ளப்படவுள்ளது. இதில், தனித்துணை ஆட்சியரால் (முத்திரை) அனுப்பப்பட்ட ஆவணங்கள், மதிப்பு நிர்ணயம் செய்யப்பட்ட ஆவணங்களின் எண்ணிக்கை மற்றும் நிலுவை ஆவணங்கள் வரப்பெற்றது, கட்டிட களப்பணி சார்பதிவாளர் நிலையில் முடிக்கப்பட்டது, உதவி செயற்பொறியாளர் நிலையில் முடிக்கப்பட்டது மற்றும் நிலுவை ஆணவங்கள், மதிப்பு நிர்ணயம் செய்ய சார்பதிவாளர் நிலையில் முடிக்கப்பட்டது.  மாவட்ட பதிவாளர் நிலையில் நிலுவை மற்றும் துணை பதிவுத்துறை தலைவர்கள் நிலையில் நிலுவை, போலி ஆவண பதிவு தொடர்பான மனுக்களின் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை விவரங்கள், பெறப்பட்ட மனுக்கள், விசாரணை முடிக்கப்பட்டது, விசாரணையில் உள்ளது, விசாரணை துவங்கப்பட்டது, கடந்த மே 7ம் தேதிக்கு பிறகு வரன்முறை செய்யப்பட்டாத மனை பிரிவுகள் பதிவு, சார்பதிவாளர்களால் ஏற்படுத்தப்பட்ட இழப்புகள் தொடர்பான விவரங்கள், வழிகாட்டி மதிப்புகளை இணையதளத்தில் உட்புகுத்துதல் தொடர்பான விவரங்கள், ஆவணப்பதிவு அன்றே திரும்ப வழங்க பெறும் ஆவணங்களின் விவரங்கள், வில்லங்கம் மற்றும் நகல்கள் விரைவில் வழங்குதல் தொடர்பான விவரங்கள், புதிதாக கட்டப்பட்ட வரும் கட்டிடங்கள் நிலுவை, புதிய கட்டிடங்கள் கட்டுவதற்கு இடம் பெற வேண்டிய இடங்கள், இவை அனைத்தும் ஒவ்வொரு வாரமும் செவ்வாய்க்கிழமை பிற்பகல் 12 மணி முதல் 1 மணி வரை காணொலி காட்சி மூலமாக பதிவுத்துறை தலைவரால் ஆய்வு மேற்கொள்ளப்படும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.