இந்தியாவில் ஒரேநாளில் 41,157 பேர் கொரோனாவால் பாதிப்பு; 518 பேர் உயிரிழப்பு; 42,004 பேர் குணமடைந்து டிஸ்சார்ஜ்: மத்திய சுகாதாரத்துறை

டெல்லி: நாட்டில் கொரோனாவால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 4.13 லட்சத்தை தாண்டியுள்ளது. அதே போல், இந்தியாவில் இதுவரை கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 3.11 கோடியாக உயர்ந்துள்ளது. இன்று காலை 8 மணியுடன் முடிந்த 24 மணி நேரத்தில், நாட்டில் கொரோனாவால் புதிதாக பாதித்தவர்கள், குணமடைந்தோர், பலியானோர், இறப்பு விகித நிலவரம் குறித்து மத்திய சுகாதார அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு:* புதிதாக 41,157 பேர் பாதித்துள்ளனர்.* இதன் மூலம், மொத்த பாதிப்பு எண்ணிக்கை 3,11,06,065 ஆக உயர்ந்தது.* புதிதாக 518 பேர் இறந்துள்ளனர்.* இதனால், நாட்டின் மொத்த உயிரிழந்தோர் எண்ணிக்கை 4,13,609 ஆக உயர்ந்தது.* தொற்றில் இருந்து ஒரே நாளில் 42,004 பேர் குணமடைந்துள்ளனர்.* இதனால் குணமடைந்தோர் எண்ணிக்கை 3,02,69,796 ஆக உயர்ந்துள்ளது.* இந்தியாவில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட 4,22,660  பேருக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்படுகிறது.* இந்தியாவில் இதுவரை 40,49,31,715 பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.