இந்திய அணி வெற்றி

சுற்றுலா இந்திய கிரிக்கெட் அணிகளுக்கும் இலங்கை அணிக்குமிடையிலான முதலாவது ஒரு நாள் சர்வதேச கிரிக்கெட்  போட்டியில் இந்திய அணி 7 விக்கெட்டுக்கள் வித்தியாசத்தில் வெற்றிப் பெற்றுள்ளது.

சுகதாச விளையாட்டு மைதானத்தில் நடைபெற்ற இந்த போடடியில் நாணய சுழற்சியை வென்ற இலங்கை அணி முதலில் துடுப்பெடுத்தாடி 50 ஓவர்கள் நிறைவில் 9 விக்கெட்டுக்களை இழந்து 262 ஓட்டங்களைப் பெற்றது.

இலங்கை அணி சார்பில் சமிக கருணாரத்ன ஆட்டமிழக்காமல் 43 ஓட்டங்களைப் பெற்றார். தசுன் சானக 39 ஓட்டங்களையும் சரித் அசலங்க 38 ஓட்டங்களையும் அவிஷ்க பெர்ணான்டோ 32 ஓட்டங்களையும் பெற்றனர்.

பந்து வீச்சில் தீபக் சஹார், குல்தீப் யாதவ் மற்றும் சஹால் ஆகியோர் தலா 2 விக்கெட்டுக்களை கைப்பற்றினர்.

263 என்ற வெற்றி இலக்கை நோக்கி பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய இந்திய அணி 36.4 ஓவர்கள் நிறைவில் 3 விக்கெட்டுக்களை இழந்து வெற்றி இலக்கை அடைந்தது.

இந்திய அணி சார்பில் அணித்தலைவர் சிகர் தவான் ஆட்டமிழக்காமல் 86 ஓட்டங்களையும் ,தனது கன்னி ஒருநாள் சர்வதேச கிரிக்கெட்  போட்டியில்  விளையாடிய  இஷான் கிசான் முதலாவது அரைச்சதத்தினை பதிவு செய்தார். அவர் 42 பந்து வீச்சுக்களை எதிர்கொண்டு 59 ஓட்டங்களைப் பெற்றுக் கொண்டார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.