இலங்கையை சேர்ந்த சிங்கம் உதவி சீனாவுக்கு ஆதரவாக செயல்பட ரூ.38 கோடி வாங்கிய ஊடகம்: அமலாக்கத் துறை திடுக்கிடும் தகவல்

புதுடெல்லி: இந்தியாவில் ‘நியூஸ் கிளிக்’ என்ற இணையதள ஊடகம் செயல்பட்டு வருகிறது. இதன் நிதி பரிமாற்றங்களின் மீது சந்தேகம் அடைந்த அமலாக்கத் துறை, இதை பல ஆண்டுகளாக கண்காணித்து வந்தது. இதில், இந்தியாவில் சீனாவுக்கு ஆதரவான கொள்கைகளை பரப்புவதற்காக, வெளிநாடுகளில் இருந்து இந்த ஊடகம் ரூ.38 கோடியை கடந்த 2018 முதல் 2021 வரையில் பெற்றிருப்பது உறுதியாகி இருக்கிறது. இதற்கு இந்த நிதி கிடைப்பதற்கு இலங்கையை சேர்ந்த கியூபா வச்சாவளி  தொழிலதிபர் நெவில்லே ராய் சிங்கம் என்பவர் பின்பலமாக செயல்பட்டுள்ளார். இந்த நிதியில் இருந்து குறிப்பிட்ட தொகை, எல்கர் பரிஷத் வழக்கில் குற்றம்சாட்டப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ள கவுதம் நவ்லகா உள்ளிட்டோருக்கு வழங்கப்பட்டு உள்ளது  என்று அமலாக்கத் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதுதொடர்பாக, சிறையில் அடைக்கப்பட்டுள்ள நவ்லகாவிடம், அமலாக்கத் துறை சமீபத்தில் விசாரணை நடத்தியது. இதில், பல்வேறு முக்கிய தகவல்கள் கிடைத்துள்ளதாகவும், அதன் அடிப்படையில் விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அமலாக்கத் துறை தெரிவித்துள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.