உதவி ஸ்டேசன் மாஸ்டர் குடிபோதையில் உறங்கியதால் ரெயில் சேவை தாமதம்

புதுடெல்லி:
ரெயில் நிலையத்தின் துணை ஸ்டேசன் மாஸ்டர் போதையில் தூங்கியதால், டெல்லி – ஹவுரா வழித்தடத்தில் சுமார் ஒன்றரை மணி நேரம் ரெயில் சேவை பாதிக்கப்பட்டுள்ளது. கடந்த புதன்கிழமை இரவு இந்த சம்பவம் நடந்துள்ளது. 
உத்தர பிரதேசத்தின் கான்சாசி ரெயில் நிலையத்தின் துணை ஸ்டேசன் மாஸ்டரான அனிருத் குமார், புதன்கிழமை இரவு பணியின்போது தூங்கிவிட்டடார். இதனால் ரெயில்களுக்கான சிக்னல் கிடைக்காமல், பல்வேறு ரெயில்கள், மற்ற ரெயில் நிலையங்களில் நிறுத்தப்பட்டன.
மூத்த அதிகாரிகள் தொலைபேசியில் தொடர்புகொண்டபோதும், துணை ஸ்டேசன் மாஸ்டர் போனை எடுக்காததால் உடனடியாக ரெயில் நிலையத்திற்கு விரைந்தனர். அப்போது, துணை ஸ்டேசன் மாஸ்டர் தூங்கிக்கொண்டிருந்தது தெரியவந்தது. இதைக் கவனித்த அதிகாரிகள், சிக்னலை ஆன் செய்ததும், ரெயில்கள் இயக்கப்பட்டன. 
பணியின்போது அலட்சியமாக இருந்த துணை ஸ்டேசன் மாஸ்டர் சஸ்பெண்ட் செய்யப்பட்டு, அவர் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்க உத்தரவிடப்பட்டுள்ளது. அவர் குடிபோதையில் தூங்கினாரா? என்பதை உறுதி செய்ய, அவருக்கு மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.