ஒலிம்பிக்கில் அதிகம் எதிர்பார்க்கும் இந்திய வீராங்கனை ! தங்கம் உறுதி !!

உலகம் முழுவதும் இருக்கும் விளையாட்டு ரசிகர்கள் எதிர்பார்த்திருக்கும் ஒலிம்பிக் இன்னும் 5 நாட்களில் தொடங்கவுள்ளது. இதற்காக இந்திய அணியும் புறப்பட்டு சென்றது. உறுதியாக இதுவரை இல்லாத அளவில் இந்தியாவுக்கு அதிக தங்கப்பதக்கம் கிடைக்கும் என விளையாட்டு நிபுணர்கள் கூறுகின்றனர். ஏனெனில் வீரர்கள் அனைவரும் கடும் பயிற்சிக்கு பின்னர் டோக்கியோ சென்றுள்ளனர்.

இதில் உறுதியாக இருக்கிறார் வீராங்கனை வினேஷ் போகாட் (Vinesh Phogat). ஹரியாணாவில் பிறந்த வினேஷ் போகாட், உலக சாம்பியன்ஷிப் மல்யுத்த விளையாட்டில் வெண்கலப் பதக்கம் வென்றுள்ளார். இதுவே அவரது மீதான நம்பிக்கையை அதிகரிக்கச் செய்துள்ளது. 2016ஆம் ஆண்டு நடந்த ரியோ ஒலிம்பிக் போட்டியில் காலிறுதியில் காயத்துடன் வெளியேறினார். இருப்பினும், அதன் பின்னர் வினேஷ் போகாட் தனது விடாமுயற்சியாலும், கடின உழைப்பாளும் டோக்கியோ 2020க்கு தேர்வு செய்யப்பட்டள்ளார்.

வினேஷ் போகாட் 50 கிலோ பிரிவில் ஆசிய விளையாட்டு மற்றும் காமன்வெல்த் விளையாட்டு இரண்டிலும் தங்கப் பதக்கங்களை வென்றார். எனினும் இந்தாண்டு ஒலிம்பிக் போட்டியில் அவர் 53 கிலோ பிரிவில் பங்கேற்கிறார். ஆசிய மல்யுத்த சாம்பியன்ஷிப்பில் வெண்கலப் பதக்கத்துடன் 2019 ஐ தொடங்கிய அவர், யாசர் டோகு இன்டர்நேஷனல் மற்றும் போலந்து ஓபனில் தங்கப் பதக்கங்களுடன் அதைத் தொடர்ந்தார். 2019 உலக மல்யுத்த சாம்பியன்ஷிப் போட்டியில் வெண்கலப் பதக்கம் வென்ற பிறகு 2020 ஒலிம்பிக்கிற்கு தகுதி பெற்ற முதல் இந்திய மல்யுத்த வீரர் என்ற பெருமையை அவர் பெற்றார்.

டோக்யோவில் நடைபெறவுள்ள ஒலிம்பிக்ஸ் போட்டியில் இந்தியாவின் சார்பாக பதக்கம் வெல்வார் என்ற நம்பிக்கையும் இவர் மீது உள்ளது.
 

newstm.in


Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.