கன்வர் யாத்திரை ரத்து: உ.பி., அரசு அறிவிப்பு| Dinamalar

லக்னோ: கோவிட் 3வது அலைக்கு வாய்ப்புள்ளதால் கன்வர் யாத்திரையை ரத்து செய்யக் கோரி உச்ச நீதிமன்றம் அறிவுறுத்தியது. இதனைத்தொடர்ந்து, இந்த ஆண்டுக்கான கன்வர் யாத்திரை ரத்து செய்யப்பட்டதாக உத்தரப்பிரதேச அரசு அறிவித்துள்ளது.

கன்வர் யாத்திரை என்பது உத்தர பிரதேசம், டில்லி, பீஹார், உத்தரகண்ட் ஆகிய பல்வேறு மாநிலங்களில் இருந்து சிவ பக்தர்கள் ஹரித்வார், ரிஷிகேஷ் உள்ளிட்ட புனித ஸ்தலங்களுக்குக்கு ஆண்டுதோறும் பாத யாத்திரயைாக செல்வது வழக்கம். ஹரித்வார் நகரில் கங்கை நதியில் புனிதநீராடி, புனித நீர் எடுத்து வீடு திரும்புவர். வழக்கமாக கன்வர் யாத்திரை ஜூலை 25ம் தேதி முதல் ஆகஸ்ட் முதல் வாரத்துக்குள் துவங்கும். இந்த ஆண்டு ஜூலை 25ம் தேதி கன்வர் யாத்திரை நடத்த உ.பி., அரசு திட்டமிட்டிருந்தது.

கோவிட் 3வது அலை பரவலுக்கு வாய்ப்பிருப்பதாக வல்லுநர்கள் எச்சரிக்கை விடுத்துள்ள நிலையில், கன்வர் யாத்திரை தொடர்பான விவகாரத்தை உச்ச நீதிமன்றம் தாமாக முன்வந்து விசாரணை நடத்தியது. அதில், “இந்தாண்டு கன்வர் யாத்திரையில் மக்கள் கூட்டமாகச் செல்வதை அனுமதிக்க முடியாது. அவ்வாறு மதரீதியான ஊர்வலங்கள் செல்வது, கோவிட் 3வது அலைக்கு வழிவகுக்கும், மக்களின் அடிப்படை உரிமையான வாழும் உரிமைக்கு எதிரானது,” என அறிவுறுத்தியது.


latest tamil news

இதையடுத்து, இந்தாண்டு கன்வர் யாத்திரை ரத்து செய்யப்படுவதாக உத்தரகண்ட் அரசு அறிவித்தது. ஆனால், உத்தரப்பிரதேச அரசு ரத்து செய்வது குறித்து ஏதும் தெரிவிக்காமல் இருந்தது. இந்நிலையில், உ.பி., அரசின் கூடுதல் தலைமைச் செயலாளர் நவ்நீத் சிங்கால் நேற்று (ஜூலை 17) இரவு வெளியிட்ட அறிவிப்பில், ‘மாநிலத்தில் கோவிட் பரவும் சூழல், 3வது அலை ஆகியவற்றை மனதில் வைத்து பேசினோம். மதரீதியான சடங்கும் பாதிக்கப்படக்கூடாது, அதேநேரத்தில் மக்களின் பாதுகாப்பும் முக்கியம். கடந்தாண்டு ரத்து செய்யப்பட்டது போல், இந்தாண்டும் கன்வர் யாத்திரை ரத்து செய்யப்படுகிறது,’ என்றார்.

Advertisement

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.