கர்நாடக கவர்னர் தாவர்சந்த் கெலாட்டை, எம்.பி., சுமலதா, நேற்று காலை சந்திப்பு| Dinamalar

பெங்களூரு-கர்நாடக கவர்னர் தாவர்சந்த் கெலாட்டை, எம்.பி., சுமலதா, நேற்று காலை சந்தித்தார். மாண்டியாவில் நடக்கும் சட்டவிரோத கல்குவாரிகளால், கே.ஆர்.எஸ்., அணைக்கு ஏற்படும் அபாயத்தை விவரித்தார்.பின் சுமலதா கூறியதாவது:என் கோரிக்கையை, விரிவாக படித்த பின், நடவடிக்கை எடுக்கும்படி, அரசுக்கு உத்தரவிடுவதாக, கவர்னர் நம்பிக்கை அளித்துள்ளார்.முந்தைய வாரம், சுரங்கத்துறை அமைச்சர் முருகேஷ் நிரானியை சந்தித்து, வேண்டுகோள் விடுத்தேன். அவரும் செயற்படை அமைத்து, அறிக்கை தயாரித்து விரைவில் நடவடிக்கை எடுப்பதாக, கடிதம் அனுப்பினார்.மாண்டியாவில் நடக்கும், சட்டவிரோத கல்குவாரியை தடுக்க, உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.அங்குள்ள கிராமங்களில், விவசாயிகளுக்கு, சுற்றுச்சூழலுக்கு தொந்தரவு ஏற்படுகிறது. கே.ஆர்.எஸ்., அணையிலிருந்து, ஏழு கி.மீ., தொலைவில் வெடி வெடிப்பதால், வரும் நாட்களில், அணைக்கு அபாயம் ஏற்படும் வாய்ப்புள்ளது. எனவே கல்குவாரித்தொழிலை, கட்டுப்படுத்த வேண்டும்.மைசூரு ஓட்டலில், நடிகர் தர்ஷன், ஊழியரை தாக்கிய குற்றச்சாட்டு தொடர்பாக, உள்துறை அமைச்சர் பசவராஜ் பொம்மையே, விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளார்.போலீசாரின் விசாரணையால், உண்மை வெளியே வரட்டும். இதுபற்றி நான் எதுவம் சொல்ல மாட்டேன்.இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.