காங்கிரஸ் நாடாளுமன்றக் குழு மாற்றி அமைப்பு: சோனியா காந்தி நடவடிக்கை: எதிர்க்கட்சிகள் இன்று ஆலோசனை

நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத்தொடர் நாளை தொடங்க இருக்கும் நிலையில் காங்கிரஸ் கட்சியின் தலைவர் சோனியா காந்தி கட்சியின் நாடாளுமன்றக் குழுவின் அதிகார படிநிலையை மாற்றி அமைத்துள்ளார்.

இரு அவைகளின் வசதிக்காகவும், சிறப்பான முறையில் செயல்படுவதை உறுதி செய்யவும் இந்த மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக காங்கிரஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி பிறப்பித்த உத்தரவில் கூறப்பட்டுள்ளதாவது:

காங்கிரஸ் கட்சியின் தலைவரான நான், நாடாளுமன்றத்தின் இருஅவைகளிலும் காங்கிரஸ் எம்.பி.க்கள் சிறப்பாகவும், திறமையாகச் செயல்படுவதை உறுதி செய்ய நிர்வாகரீதியான மாற்றங்கள் செய்யதுள்ளேன். இந்த குழு நாள்தோறும் கூடி, அலுவல் தொடர்பாக விவாதிக்கும், அதுமட்டுமல்லாமல் நாடாளுமன்றத்தில் முக்கிய விவாதங்கள் நடக்கும் முன்பாகவும், கூட்டத்தொடர் இடையேயும் கூடி விவாதித்து முடிவு எடுப்பார்கள்.தேவைப்பட்டால் இரு குழுவினரும் இணைந்து கூட்டம் கூடி ஆலோசிப்பார்கள். இரு குழுவையும், மாநிலங்களவை எதிர்க்கட்சித் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே கூட்டி ஆலோசனை நடத்துவார்

இதன்படி மக்களவைத் தலைவராக ஆதிர் ரஞ்சன் சவுத்ரி தொடர்கிறார், துணைத் தலைவராக கவுரவ் கோகய் செயல்படுவார். மக்களவையின் தலைமைக் கொறாடாவாக கே.சுரேஷ் செயல்படுவார். ரவ்னீத் சிங் பிட்டு, மாணிக்கம் தாகூர் ஆகியோர் மக்களையின் கொறாடாக்களாக இருப்பார்கள். காங்கிரஸ் தலைவர் மணிஷ் திவாரி, டாக்டர் சசி தரூர் ஆகியோர் கொறாடா குழுவில் இடம் பெறுவர்.

மாநிலங்களவையின் தலைவராக மல்லிகார்ஜூன கார்கே செயல்படுவார், துணைத் தலைவராக ஆனந்த் சர்மா இருப்பார். மாநிலங்களவையின் தலைமைக் கொறாடாவாக ஜெய்ராம் ரமேஷும், கொறாடா குழுவில் அம்பிகா சோனி, ப.சிதம்பரம், திக்விஜய் சிங், கே.சி.வேணுகோபால் ஆகியோர் இருப்பார்கள் ” எனத் தெரிவித்துள்ளார்.

எதிர்க்கட்சிகள் ஆலோசனை

இதற்கிடையே நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத்தொடர் நாளை தொடங்க இருக்கும் நிலையில் எதிர்க்கட்சித் தலைவர்கள் இன்று பிற்பகலில் கூடி முக்கிய ஆலோசனை நடத்த உள்ளனர். இந்த ஆலோசனையில் விவசாயிகள் போரட்டம், தனியாமர் மயம், தேசத்துரோகச் சட்டம் குறித்த உச்ச நீதிமன்றத்தின் கருத்துக்கள் உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் குறித்து விவாதிக்கப்படும் எனத் தெரிகிறது.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலங்களவை எம்.பி. இளமாறன் கரீம், காங்கிரஸ் மாநிலங்களவை எதிர்க்கட்சித் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே ஆகியோர் எதிர்க்கட்சிகளை அழைத்துள்ளனர்.

இளமாறன் கரீம் கூறுகையில் “ அனைத்துக் கட்சிக் கூட்டம் இன்றுநடந்து முடிந்தபின், எதிர்க்கட்சிகளின் பிரதிநிதிகளுடன் ஆலோசிக்க முடிவு செய்து அதற்கான அழைப்பை விடுத்துள்ளோம். மழைக்காலக் கூட்டத்தொடரில் பேச வேண்டிய விஷயங்கள், பிரச்சினைகள் குறித்து கருத்தொற்றுமையை உருவாக்க இந்தக் கூட்டம் நடத்தப்படுகிறது.

தனியார்மயம், விவசாயிகள் போராட்டம், கூட்டாட்சி குறித்து மத்திய அ ரசின் போக்கு, தேசத்துரோகச் சட்டம் குறித்து உச்ச நீதிமன்றத்தின் கருத்து உள்ளிட்ட விவகாரங்கள் குறித்து இந்தக் கூட்டத்தில் பேசப்படும். எதிர்க்கட்சிகளுடன் முடிந்த அளவு கருத்தொற்றுமை ஏற்பட இந்த கூட்டத்தில் விவாதிக்கப்படும்.
தனியாமயமாக்கல் மசோதா, தொழிற்சாலை ஊழியர்கள் வேலைநிறுத்த விவாகரத்தை எழுப்பும் விஷயத்தில் எதிர்க்கட்சிகளிடையே கருத்தொற்று இல்லாவிட்டால் இந்த விவகாரத்தை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் எழுப்பும்” எனத் தெரிவித்தார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.