குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்துடன் நாளை சந்திப்பு- முதல்வர் ஸ்டாலின் இன்று டெல்லி பயணம்

முதல்வராக பதவியேற்ற பின் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்தை சந்திக்க, முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று டெல்லி செல்கிறார்.

தமிழக முதல்வராக, கடந்த மே 7-ம் தேதி மு.க.ஸ்டாலின் பொறுப் பேற்றார். அந்த காலகட்டத்தில் கரோனா பரவல் அதிகரித்திருந்த நிலை யில், குடியரசுத்தலைவரை அவர் சந் திக்கவில்லை. கரோனா பாதிப்பு குறைந்த நிலையில், கடந்த மாதம் 17-ம் தேதி டெல்லி சென்று பிரதமர் நரேந்திர மோடியை முதல்வர் மு.க.ஸ்டாலின் சந்தித்தார்.

இந்நிலையில், இரண்டாவது முறை யாக இன்று டெல்லி செல்கிறார். இன்று மாலை 4 மணிக்கு சென்னையில் இருந்து டெல்லி செல்லும் அவரை, தமிழக எம்பிக்கள் வரவேற்கின்றனர். அதன் பின் நாளை 19-ம் தேதி, குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் மரியாதை நிமித்தமாக சந்திக்கிறார். இந்த சந்திப்பில் தலைமைச் செயலர் வெ.இறையன்பு , டெல்லி சிறப்பு பிரதிநிதி ஏ.கே.எஸ்.விஜயன் உள்ளிட்டோர் பங்கேற்க வாய்ப்புள்ளது. சந்திப்பு முடிந்த பின், அன்று இரவே சென்னை திரும்புகிறார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.