குறும்படத்தால் நாசமா போன குடும்பம்.. திருமணமான 6 மாதத்தில் காதல் மனைவி தற்கொலை..!

சென்னை பெரம்பூர் நீலம் தோட்டம் தெருவைச் சேர்ந்தவர் ராமச்சந்திரன் (21). இவர், கடந்த 6 மாதங்களுக்கு முன்பு கீர்த்தனா (21) என்ற பெண்ணை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இந்நிலையில், கீர்த்தனா சூப்பர் மார்க்கெட் ஒன்றில் வேலை செய்து வந்தார்.

கடந்த சில நாட்களாக ராமசந்திரன் குறும்படம் எடுப்பதிலேயே ஆர்வம் காட்டி அதை சமூகவலைதளங்களில் பதிவிட்டு வந்துள்ளார். இதனால், கணவன்-மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளதால் கீர்த்தனா மனஉளைச்சலில் இருந்துள்ளார். வாழ்க்கையிவ் வெறுப்பு அடைந்த  கீர்த்தனா மரச்சாமான்கள் கெட்டுப்போகாமல் இருக்க பயன்படுத்தப்படும் செல் ஆயிலை குடித்து தற்கொலைக்கு முயன்றார்.

அப்போது,மயக்க நிலையில் இருந்த கீர்த்தனாவை உடனடியாக மீட்டு ராமசந்திரன் அரசு மருத்துவமனையில் அனுமதித்தார். பின்னர், மேல்சிகிச்சைக்காக  ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். ஆனால்,  சிகிச்சை பலனின்றி கீர்த்தனா நேற்று மதியம் பரிதாபமாக உயிரிழந்தார்.

இதுகுறித்து திரு.வி.க. நகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். மேலும் கீர்த்தனாவுக்கு திருமணமாகி 6 மாதங்களே ஆவதால் ஆர்.டி.ஓ. விசாரணைக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளது. காதல் கணவரின் செயல்பாடுகளால் வெறுத்தபோன இளம்பெண்  தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதி பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

  • Young women
  • suicide
  • police investigation

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.