சம்பளத்தை தடலாடியாக உயர்த்திய உப்பென்னா நாயகி?

சம்பளத்தை தடலாடியாக உயர்த்திய உப்பென்னா நாயகி?

18 ஜூலை, 2021 – 15:00 IST

சமீபத்தில் தெலுங்கில் அறிமுக நடிகர்களான வைஷ்ணவ் தேஜ், க்ரீத்தி ஷெட்டி மற்றும் முக்கிய வேடத்தில் விஜய்சேதுபதி நடிப்பில் வெளியான ‘உப்பென்னா’ படம் மிகப்பெரிய வெற்றி பெற்றது. குறிப்பாக கதாநாயகி க்ரீத்தி ஷெட்டிக்கு தெலுங்கில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. அந்தவகையில் அடுத்தடுத்து இரண்டு படங்களில் ஒப்பந்தமான க்ரீத்தி, சம்பளமாக 50 லட்சம் ரூபாய் கேட்டு அப்போதே ஆச்சர்யப்படுத்தினாராம்.
இந்தநிலையில் அடுத்தடுத்து மிகப்பெரிய வாய்ப்புகள் வருவதால் தற்போது தனது சம்பளத்தை 2 கோடி ரூபாய் கேட்டு அதிர்ச்சி கொடுக்கிறாராம். சமீபத்தில் நாகசைதன்யாவுடன் ஜோடியாக நடிப்பதற்காக அணுகிய தயாரிப்பாளருக்குத்தான் இந்த அதிர்ச்சி வைத்தியம் அளித்துள்ளாராம் க்ரீத்தி ஷெட்டி.
ராஷ்மிகா போல இவரும் குறுகிய காலத்தில் ரசிகர்களிடம் ரீச் ஆனதால் அது படத்தின் வியாபாரத்துக்கு பிளஸ் ஆக இருக்கும் என்றாலும் நடித்து ஒரு படம் மட்டுமே வெளியான நிலையில் 2 கோடி கேட்பதெல்லாம் ரொம்பவே ஓவர் என முணுமுணுக்கிறார்களாம் தயாரிப்பாளர்கள். இன்னும் சிலரோ க்ரீத்தி ஷெட்டியின் வளர்ச்சி பிடிக்காதவர்கள் பரப்பிவிடும் வதந்தி என்கிறார்கள். எது உண்மையோ.?

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.