சர்ச்சை நடிகையிடம் மீண்டும் ஒரு ஆடு சிக்கியிருக்காம்.. ஏகப்பட்ட கண்டிஷனும் போட்டுருக்காராம்!

By Mari S

|

சென்னை: கணவரை பிரிந்து வாழ்ந்து வரும் அந்த சர்ச்சை நடிகை மீண்டும் ஒரு பாய் ஃபிரெண்டை தேடி வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

ஏற்கனவே வடமாநிலத்தில் ஒரு ஆண் நண்பருடன் லிவ்விங் டுகெதரில் வாழ்ந்து வந்த அந்த நடிகை அவருடன் ரகசியமாக எடுத்துக் கொண்ட புகைப்படங்கள் கசியவே அவரை கழட்டி விட்டு விட்டார்.

இந்நிலையில், மறுபடியும் ஒரு தேடல் முயற்சியில் மும்முரமாக ஈடுபட்டு வருகிறாராம்.

முற்றும் துறந்து

சினிமா தான் அந்த நடிகைக்கு உயிரே. அதற்காக முற்றும் துறந்தும் நடித்து முடித்து விட்டார். ஆனால், அவர் எதிர்பார்த்த வெற்றியை மட்டும் அவருக்கு இன்னும் பெரிய அளவில் கிடைக்கவே இல்லை. முன்னணி நடிகர்களும் சர்ச்சை கிளம்பியதும் நடிகையை கழட்டி விட்டு விட்டனர்.

முறிந்த உறவு

முறிந்த உறவு

நடிகையின் செயல் எல்லை மீறி சென்ற நிலையில், அந்த நடிகையை ஆசைப்பட்டு திருமணம் செய்து கொண்ட அந்த பிரபலமும் விவாகரத்து செய்ய ஒப்புக் கொள்ள முதல் திருமணம் முடிவுக்கு வந்தது. மறைமுகமாக நடிகை கோலிவுட்டில் நடிக்க முடியாதபடி வேலைகளும் அரங்கேறியது.

மற்ற மொழிகளில் பிசி

மற்ற மொழிகளில் பிசி

கோடம்பாக்கம் கை விட்டால் என்ன நாடு முழுவதும் நடிக்கப் போறேன் என ரொம்பவே பிசியாகி விட்டார் அந்த சர்ச்சை நடிகை. அப்படி வடமாநிலம் பக்கம் போன அவர் அங்கே ஒரு பிரபலத்துடன் காதல் வலையில் விழ இருவரும் ஒன்றாக ஒரே வீட்டில் தங்கி லிவிங் டுகெதர் வாழ்க்கை வாழ்ந்துள்ளனர்.

ரகசிய திருமணம்

ரகசிய திருமணம்

நடிகை எந்த நேரத்திலும் நம்மை கழட்டி விட்டு விடுவார் என பயந்து போன அந்த பிரபலம் நடிகையுடன் ரகசியமாக நடந்த திருமண புகைப்படங்களை வெளியே கசிய விட, அந்த பிரபலத்தையும் கழட்டி விட்டு தனது பாதையில் தனியே பயணிக்க தொடங்கி விட்ட நடிகை மீண்டும் சினிமாவில் பிசியாகி விட்டார்.

பாய் ஃபிரெண்ட் வேணும்

பாய் ஃபிரெண்ட் வேணும்

ஆனால், எத்தனை நாளைக்குத் தான் தனியாக இருப்பது என யோசித்த நடிகை தற்போது மீண்டும் ஒரு புது பாய் ஃபிரெண்டை தேடி வருகிறாராம். பிடிக்கும் வரை சந்தோஷமாக ஒன்றாக இருப்போம். பிடிக்கவில்லையா பிரிந்து விடுவோம் என்கிற கண்டிஷனையும் இவர் போட்டு வருவதால் பசங்க கொஞ்சம் யோசித்து வருகிறார்களாம்.

அந்த கண்டிஷனும்

அந்த கண்டிஷனும்

மேலும், தன்னுடன் பழகும் புகைப்படங்களையோ வீடியோக்களையோ எடுத்து எந்தவொரு சோஷியல் மீடியாவிலும் தனக்கு தெரியாமல் கசிய விடக் கூடாது என்கிற பயங்கர கண்டிஷனும் போட்டுள்ளாராம். இத்தனைக்கும் தலையை ஆட்டி புதிதாக ஒரு ஆடு தலையை நீட்டி சிக்கியிருப்பதாகவும் தகவல்கள் கசிந்துள்ளன.

English summary
Controversy actress fell in love with a new boy friend gossip circulates in social media. Before She got a divorce from a popular celebrity and also her second love photos leaked in social media.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.