சிறப்பு ரயில் சேவை துவக்கம்| Dinamalar

பெங்களூரு-”யஷ்வந்த்பூர் – கண்ணுாருக்கு தினந்தோறும் சிறப்பு விரைவு ரயில் சேவை, வரும் 23லும்; யஷ்வந்த்பூர் – மங்களூரு வாராந்திர ரயில் சேவை, வரும் 25லும் துவங்கப்படுகிறது,” என, தென்மேற்கு ரயில்வே அறிவித்துள்ளது.தென்மேற்கு ரயில்வே வெளியிட்டுள்ள அறிக்கை:எண். 07389 யஷ்வந்த்பூர் – கண்ணுார் விரைவு ரயில், யஷ்வந்த்பூரிலிருந்து தினமும் இரவு 8:00 மணிக்கு புறப்பட்டு, மறுநாள் காலை, 9:45 மணிக்கு கண்ணுார் சென்றடையும்.அதேபோன்று எண். 07390 கண்ணுார் – யஷ்வந்த்பூர் விரைவு ரயில், கண்ணுாரிலிருந்து தினமும் மாலை, 6:05 மணிக்கு புறப்பட்டு, மறுநாள் காலை, 7:50 மணிக்கு யஷ்வந்த்பூர் வந்தடையும்.யஷ்வந்த்பூரிலிருந்து புறப்படும் ரயில், பானஸ்வாடி, கார்மேலரம், ஓசூர், தர்மபுரி, சேலம், ஈரோடு, திருப்பூர், கோயம்புத்துார், பாலக்காடு, சொரனுார், குட்டிபுரம், திரூர், கோழிக்கோடு, குலன்டி, வடகரா, டெல்லிசெரி வழியாக கண்ணுார் சென்றடையும்.எண். 07391 யஷ்வந்த்பூர் – மங்களூரு சென்ட்ரல் விரைவு ரயில், ஞாயிறுதோறும், யஷ்வந்த்பூரிலிருந்து இரவு 11:55 மணிக்கு புறப்பட்டு, மறுநாள் மாலை 4:05 மணிக்கு மங்களூரு சென்ட்ரல் சென்றடையும்.அதேபோன்று எண். 07392 மங்களூரு சென்ட்ரல் – யஷ்வந்த்பூர் விரைவு ரயில், திங்கள்தோறும் மங்களூரு சென்ட்ரலிலிருந்து இரவு 8:05 மணிக்கு புறப்பட்டு, மறுநாள் மதியம் 1:00 மணிக்கு யஷ்வந்த்பூர் வந்தடையும்.யஷ்வந்த்பூரிலிருந்து புறப்பட்டு பானஸ்வாடி, கிருஷ்ணராஜபுரம், பங்கார்பேட், குப்பம், சேலம், ஈரோடு, திருப்பூர், கோயம்புத்துார், பாலக்காடு, சொரனுார், திரூர், கோழிக்கோடு, வடகரா, டெல்லிசெரி, கண்ணுார், பையனுார், கன்னான்கட், காசர்கோடு வழியாக மங்களூரு சென்ட்ரல் சென்றடையும்.இவ்வாறு அதில் குறிப்பிட்டுள்ளது.

Advertisement

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.