ஜிவி பிரகாஷ் அடுத்து இந்த சூப்பரான இயக்குநர் படத்தில் நடிக்கப் போறாரா? வைரலாகும் தகவல்!

By Mari S

|

சென்னை: இசையமைப்பாளராக அசுரன், சூரரைப் போற்று என கலக்கி வரும் ஜிவி பிரகாஷ் ஹீரோவாகவும் முக்கால் டஜன் படங்களில் நடித்து முடித்துள்ளார்.

அடங்காதே, 4ஜி, ஜெயில், ஐங்கரன் என ஏகப்பட்ட படங்கள் ரிலீசாகாமல் இருக்க அடுத்த படத்தில் நடிக்கும் முயற்சியை ஆரம்பித்துள்ளார் ஜிவி பிரகாஷ்.

இயக்குநர் சீனுராமசாமி உடன் தான் அவர் இணையப் போவதாக தகவல்கள் கசிந்துள்ளன.

தரமான இயக்குநர்

2007ம் ஆண்டு வெளியான கூடல் நகர் படத்தின் மூலமாக இயக்குநராக அறிமுகமான சீனுராமசாமி தென்மேற்குப் பருவக் காற்று, நீர்ப்பறவை, இடம் பொருள் ஏவல், தர்மதுரை, கண்ணே கலைமானே, மாமனிதன் உள்ளிட்ட தரமான படைப்புகளை இயக்கி உள்ளார்.

மாமனிதன் ரெடி

மாமனிதன் ரெடி

பல ஆண்டுகளாக இடம் பொருள் ஏவல் படம் ரிலீசாகமால் கிடப்பில் போடப்பட்டு இருக்கிறது. தென்மேற்குப் பருவக் காற்று, தர்மதுரை படங்களை தொடர்ந்து மீண்டும் விஜய்சேதுபதி உடன் இணைந்து அவர் உருவாக்கி உள்ள மாமனிதன் படம் ரிலீசுக்கு காத்திருக்கிறது. கூடிய சீக்கிரமே ஒடிடி ரிலீசாக வரும் என பேச்சுக்கள் அடிபட்டுள்ளன.

சீனுராமசாமி இயக்கத்தில்

சீனுராமசாமி இயக்கத்தில்

மாமனிதன் படம் ரிலீசுக்கு தயாராக உள்ள நிலையில், அடுத்ததாக இயக்குநர் சீனுராமசாமி ஜிவி பிரகாஷை இயக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இசையமைப்பில் ஒரு பக்கம் கவனமாக இருந்தாலும் ஹீரோவாக நடிப்பதிலேயே அதிக ஆர்வம் செலுத்தி வருகிறார் ஜிவி பிரகாஷ். மதுரையை களமாக கொண்டு இந்த படம் உருவாகப் போகிறதாம்.

முக்கால் டஜன்

முக்கால் டஜன்

அடங்காதே, ஐங்கரன், ஜெயில், 4ஜி, ஆயிரம் ஜென்மங்கள், பேச்சுலர், காதலை தேடி நித்தியானந்தா, டிராப் சிட்டி, காதலிக்க யாருமில்லை என மொத்தம் 9 படங்களை கைவசம் வைத்துள்ளார் நடிகர் ஜிவி பிரகாஷ். இந்நிலையில், பத்தாவது படமாக சீனு ராமசாமி உடன் இணையப் போவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

ஓடுவதில்லை

ஓடுவதில்லை

அசுரன், சூரரைப் போற்று என இசையில் மிரட்டி வரும் ஜிவி பிரகாஷ் நடிப்பிலும் தன்னால் முடிந்த அளவுக்கு முழு முயற்சியையும் செலுத்தி நல்ல கதைகளை தேர்வு செய்து நடித்து வருகிறார். ஆனால், எதிர்பார்த்த அளவுக்கு அவர் நடிக்கும் படங்கள் பெரிதாக ஓடுவதில்லை என்பது ஜிவி பிரகாஷின் ரசிகர்களுக்கு வருத்தத்தை அளித்து வருகிறது.

English summary
GV Prakash wishes to join with Director Seenu Ramasamy for his next film buzz circulates in social media.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.