டெல்லி சென்றார் முதல்வர் ஸ்டாலின்!

ஹைலைட்ஸ்:

முதல்வராக பொறுப்பேற்றபின், ஸ்டாலின் இரண்டாவது முறையாக டெல்லி சென்றுள்ளார்
எழுவர் விடுதலை விவகாரம், நீட் தேர்வு உள்ளிட்டவைகள் குறித்து குடியரசுத் தலைவரிடம் பேசவுள்ளதாக தகவல்

தமிழ்நாடு முதலமைச்சராக பொறுப்பேற்றுள்ள
ஸ்டாலின்
குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்தை முதன்முறையாக நாளை சந்திக்க உள்ளார். இதற்காக சென்னை விமான நிலையத்தில் இருந்து தனி விமானம் மூலம் அவர் இன்று மாலை
டெல்லி
புறப்பட்டுச் சென்றார்.

டெல்லி சென்ற ஸ்டாலினை விமான நிலையத்தில் திமுக எம்.பி.க்கள் டி.ஆர்.பாலு, திருச்சி சிவா, தமிழ்நாடு அரசின் டெல்லி சிறப்பு பிரதிநிதி ஏ.கே.எஸ் விஜயன் உள்ளிட்ட பலர் வரவேற்றனர். குடியரசுத் தலைவருடனான சந்திப்பின்போது, தமிழ்நாடு சட்டப்பேரவையில் முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் உருவப் படத்தை திறந்து வைக்குமாறு ஸ்டாலின் அழைப்பு விடுப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அத்துடன், எழுவர் விடுதலை விவகாரம், நீட் தேர்வு உள்ளிட்டவைகள் குறித்தும் குடியரசுத் தலைவரிடம் ஸ்டாலின் பேசவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. முதல்வராக பொறுப்பேற்றபின், ஸ்டாலின் இரண்டாவது முறையாக டெல்லி சென்றுள்ளார்.

பெண்களுக்கான இலவச டிக்கெட்டில் நூதன மோசடி!

முன்னதாக, கடந்த ஜூன் மாதம் அவர் டெல்லி சென்ற போது பிரதமர் மோடியை சந்தித்து தமிழகத்திற்கான நலத்திட்டங்கள் அடங்கிய கோரிக்கை மனுவை அளித்தார். தொடர்ந்து, அவர் காங்கிரஸ் தலைவர் சோனியா, ராகுல் உள்ளிட்ட தலைவர்களையும் சந்தித்தார். நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத்தொடர் நாளை தொடங்கவுள்ள நிலையில், ஸ்டாலின் டெல்லி சென்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.