தடுப்பூசி போட்டுக்கொள்ள பயந்து நடுங்கிய நடிகை சினேகா..! காமெடியாக வீடியோ வெளியிட்ட பிரசன்னா..!

பிரபலங்கள் தொடர்ந்து, கொரோனா தொற்றுக்கு எதிரான தடுப்பூசி போட்டுக்கொள்வது மட்டும் இல்லாமல் ரசிகர்களும், மக்களும், எவ்வித அச்சமும் இன்றி தடுப்பூசி போட்டுக்கொள்ளவேண்டும் என்பதற்காக… தாங்கள் தடுப்பூசி போட்டு கொள்ளும் புகைப்படத்தை வெளியிட்டு வருகிறார்கள். அந்த வகையில் தற்போது தமிழ் சினிமாவின் நட்சத்திர ஜோடிகளின் ஒருவரான சினேகா – பிரசன்னா ஜோடி முதல் டோஸ் தடுப்பூசி போட்டு கொடுள்ளனர்.

கொரோனாவை முற்றிலும் தடுக்க தடுப்பூசி போட்டுக்கொள்வது என்பது மிகவும் அவசியமானது. தடுப்பூசி செலுத்தி கொண்டால், கொரோனா தொற்று ஏற்பட்டால் கூட… உயிர்சேதங்களை தடுக்க முடியும் என மருத்துவர்கள் மற்றும் சுகாதார துறையினர் கூறி வருகிறார்கள். அதே நேரத்தில், தமிழக மக்கள் அனைவருக்கும் தடுப்பூசி போட்டு முடிக்க வேண்டும் என்கிற முனைப்போடு செயல் படுகிறது மத்திய மற்றும் மாநில அரசுகள்.

ஆரம்பத்தில் மக்கள் தடுப்பூசி செலுத்தி கொள்வதில் தயக்கம் காட்டினாலும், சமீப காலமாக வரிசையில், சமூக இடைவெளியோடு நின்று தடுப்பூசி போட்டு கொள்வதில் ஆர்வம் காட்டுகிறார்கள். ஆனால் சில இடங்களில் தடுப்பூசி பற்றாக்குறை ஏற்படுகிறது. இதனை சரி செய்யும் முயற்சிகளையும் தமிழக அரசு எடுத்து வருகிறது. 

மேலும் ஏற்கனவே சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், சூர்யா, ஜோதிகா, சூரி, சிவகார்த்திகேயன், கீர்த்தி சுரேஷ், உள்ளிட்ட பல முன்னணி நடிகர்கள் தடுப்பூசி போட்டு கொண்ட நிலையில், தற்போது தமிழ் திரையுலகின் நட்சத்திர ஜோடிகளின் ஒருவரான சினேகா – பிரசன்னா ஜோடி முதல் டோஸ்  தடுப்பூசி போட்டு கொண்டுள்ளனர். சினேகா மிகவும் தைரியமாக தடுப்பூசி போட்டு கொள்வது போல் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் புகைப்படம் வெளியிட்டருந்த நிலையில், சினேகா தடுப்பூசி போட்டு கொள்ள பயந்து நடுங்கிய வீடியோவை பிரசன்னா காமெடியாக வெளியிட்டுள்ளார்.

இந்த வீடியோ தற்போது சமூக வலைத்தளத்தில் வைரலாக பார்க்கப்பட்டு வருகிறது: 

View this post on Instagram

A post shared by Prasanna_actor (@prasanna_actor)

  • sneha prasanna
  • tamil cinema
  • kollywood
  • actress
  • vaccinated
  • video


Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.