தலைவரின் ஜப்பான் ரசிகர்கள் கொண்டாடும் 'தர்பார்' திருவிழா! முதல் நாளே ஹவுஸ் ஃபுல்… வைரல் வீடியோ!

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் நடித்து கடந்த ஆண்டு வெளியான ‘தர்பார்’ படம் தற்போது ஜப்பானில் வெளியாகி பட்டையை கிளப்பி வருகிறது. 

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நீண்ட இடைவெளிக்குப் பிறகு போலீஸ் அதிகாரியாக நடித்திருந்த திரைப்படம் தர்பார். அவருக்கு ஜோடியாக நயன்தாராவும், வில்லனாக நடிகர் சுனில் ஷெட்டியும் நடித்திருந்தனர். ரஜினிகாந்தின் மகளாக நிவேதா தாமஸ் நடித்திருந்தார். லைகா புரொடக்‌ஷன்ஸ் பிரமாண்டமாக தயாரித்த இந்தப் படத்துக்கு அனிருத் இசையமைத்திருந்தார். ரசிகர்களின் பல்வேறு எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் வெளியான இந்த திரைப்படம் எதிர்பார்த்த அளவிற்கு வெற்றிபெறவில்லை.

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தமிழில் வெளியான இத்திரைப்படம் அதே நாளில் தெலுங்கு, இந்தி, ஆகிய மொழிகளிலும் வெளியாகி ஏராளமான ரசிகர்களால் ரசிக்கப்பட்டது. படத்தைப் பார்த்து ரசித்த ரசிகர்கள் ரஜினிகாந்தின் ஸ்டைலைக் கொண்டாடினாலும் கலவையான விமர்சனங்களும் இப்படத்துக்கு கிடைத்தது என்பது தான் உண்மை.

தலைவருக்கு தென்னிந்திய திரையுலகை தாண்டி, மலேசியா, ஜப்பான் போன்ற வெளிநாடுகளிலும் தீவிர ரசிகர்கள் உள்ளனர். இந்நிலையில் தற்போது ‘தர்பார்’ திரைப்படம் ஜப்பான் மொழியில் மொழிபெயர்க்கப்பட்டு இன்று பல திரையரங்குகளில் வெளியாகியுள்ளது. இதனை ‘தர்பார்’ திருவிழாவாகவே ரசிகர்கள் கொண்டாடி வரும் நிலையில், முதல் நாளே அனைத்து டிக்கெட்டுகளை ஹவுஸ் ஃபுல் ஆகியுள்ளது. இது குறித்த வீடியோ தற்போது வெளியாகி சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.

 

  • super star rajinikanth
  • darbar movie
  • house full
  • viral video
  • nayanthara
  • release in jappan


Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.