தூங்காத கண்ணென்று ஒன்று…| Dinamalar

மூன்று நாட்கள் தொடர்ந்து சரியான துாக்கம் இல்லாமல் வேலை செய்பவர்களுக்கு உடல்,
மனதளவில் பாதிப்பு ஏற்படும் என அமெரிக்காவின் புளோரிடா பல்கலை ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தொழில்நுட்ப வளர்ச்சி காரணமாக வேலை நேரங்களில் பல்வேறு மாற்றங்கள் ஏற்பட்டு
உள்ளன. ஐ.டி., ஆன்லைன் பணியின் வரவுக்குப்பின் இரவு நேர பணி அவசியமான ஒன்றாகி விட்டது. இதனால் துாக்கம் பாதிக்கப்படுகிறது. துாக்கமின்மை தொடர்பாக அமெரிக்காவில் நடந்த ஆய்வில் 2000 பட்டதாரி இளைஞர்கள் பங்கேற்றனர். இவர்களின் தொடர்ந்து எட்டு நாள் துாங்கும் நேரம் கணக்கில் எடுத்துக்கொள்ளப்பட்டது. இதில் 42 சதவீதம் பேர் ஒருநாள் மட்டும் துாங்காமல் இருந்தவர்கள்.

தொடர்ந்து மூன்று இரவுகள் போதிய நேரம் துாங்காமல் இருப்பவர்களுக்கு கோபம், பதற்றம், எரிச்சல், விரக்தி, தனிமை உணர்வு போன்ற மனநல பாதிப்புகளும், உடல் வலி, மூச்சு விடுதலில் சிரமம் போன்ற உடல் நல பாதிப்புகளும் உருவாகிறது என ஆய்வில் விஞ்ஞானிகள் கண்டறிந்தனர். இரவில் ஒரு நாளைக்கு குறைந்தது 7 மணி நேரமாவது இளைஞர்கள் துாங்க வேண்டும் என விஞ்ஞானிகள் பரிந்துரைத்துள்ளனர்.

Advertisement

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.