தெலுங்கு இயக்குநருடன் கூட்டணி வைக்கும் சிவகார்த்தியேன்.. சம்பளம் எவ்ளோ தெரியுமா?

|

சென்னை: நடிகர் சிவகார்த்திகேயன் தெலுங்கு படத்தில் நடிக்க பெறப்போகும் சம்பளம் குறித்த தகவல் வெளியாகியுள்ளது.

நடிகர் சிவகார்த்திகேயன் தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருகிறார்.

சின்னத்திரையில் விஜேவாக இருந்து முன்னணி நடிகராக உயர்ந்துள்ள சிவகார்த்திகேயன், சினிமா கனவுடன் இருக்கும் பல விஜேக்களுக்கு ரோல் மாடலாக உள்ளார்.

ஹிட் படங்கள்

தனுஷின் 3 படத்தில் அவருக்கு நண்பராக நடித்தார் சிவகார்த்திகேயன். தொடர்ந்து மனம் கொத்தி பறவை, கேடி பில்லா கில்லாடி ரங்கா, வருத்தப்படாத வாலிபர் சங்கம், மான கராத்தே, காக்கி சட்டை, ரஜினிமுருகன், ரெமோ உளிளட்ட பல படங்களில் நடித்தார்.

ரிலீசுக்கு தயார்

ரிலீசுக்கு தயார்

மேலும் வேலைக்காரன், சீமராஜா, கனா, மிஸ்டர் லோக்கல், ஹீரோ ஆகிய படங்களிலும் நடித்தார் சிவகார்த்திகேயன். தற்போது டாக்டர், டான், அயலான் ஆகிய படங்களில் நடித்து வருகிறார். இதில் டாக்டர் படம் ரிலீசுக்கு தயாராக உள்ளது.

இயக்குநர் அனுதீப்

இயக்குநர் அனுதீப்

இந்நிலையில் சிவகார்த்திகேயன் தெலுங்கு இயக்குநர் ஒருவருடன் இணைந்து பணியாற்ற உள்ளதாக அண்மையில் தகவல் வெளியானது. அதாவது கடந்த மார்ச் மாதம் தெலுங்கில் வெளியாகி பிளாக்பஸ்டர் ஹிட்டான ‘ஜாதி ரத்னலு’ படத்தை இயக்கிய அனுதீப்பின் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிக்கவுள்ளார்.

விரைவில் அறிவிப்பு

விரைவில் அறிவிப்பு

இந்தப் படம் தமிழ், தெலுங்கு ஆகிய இரு மொழிகளிலும் தயாராக உள்ளது. இப்படத்தின் மூலம் நடிகர் சிவகார்த்திகேயன் தெலுங்கில் அறிமுகமாகவுள்ளார். இப்படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என தெரிகிறது.

சிவகார்த்திகேயன் சம்பளம்

சிவகார்த்திகேயன் சம்பளம்

இந்நிலையில் இரண்டு மொழிகளில் ரிலீஸ் ஆகவுள்ள இப்படத்தில் நடிக்க நடிகர் சிவகார்த்திகேயன் பெறும் சம்பளம் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி நடிகர் சிவகார்த்திகேயன் 25 கோடி ரூபாய் சம்பளம் பெறவுள்ளார்.

ஸ்ரீவெங்கடேஷ்வரா நிறுவனம்

ஸ்ரீவெங்கடேஷ்வரா நிறுவனம்

இதன்மூலம் நடிகர் சிவகார்த்திகேயன் முதல் முறையாக 25 கோடி ரூபாய் சம்பளத்தை எட்டியுள்ளார். சிவகார்த்திகேயன் நடிக்கும் படத்தை ஸ்ரீவெங்கடேஷ்வரா நிறுவனம் தயாரிக்கிறது. இந்த நிறுவனம்தான் சேகர் கம்முலா இயக்கத்தில் தனுஷ் நடிக்கும் படத்தையும் தயாரிக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

English summary
Actor Sivakarthikeyan’s salary for Telugu bilingual movie reveals. For the first time Sivakarthikeyan gets Rupees 25 crore salary for his movies.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.