நடிகர் தனுஷை ட்விட்டரில் பின்தொடரும் 10 மில்லியன் ஃபாலோயர்கள்

கோலிவுட் சினிமாவில் பத்து மில்லியன் ஃபாலோயர்களை பெற்றுள்ள முதல் நடிகர் என்ற மைல்கல்லை எட்டியுள்ளார் நடிகர் தனுஷ். 

‘துள்ளுவதோ இளமை’ திரைப்படத்தின் மூலமாக வெள்ளித்திரையில் என்ட்ரி கொடுத்தவர் நடிகர் தனுஷ். ஒல்லியான தேகம், ஒட்டிப்போன கண்கள் என பார்ப்பதற்கு பக்கத்து வீட்டு பிள்ளை போல தனுஷ் எதார்த்த நாயகனாக காட்சி தந்ததால் அவருக்கு ரசிகர்கள் ஆதரவு கொடுத்தனர். 

தொடர்ந்து தமிழ் சினிமாவில் சூப்பர் ஹிட் படங்களில் நடித்த அவர், பிற மொழி படங்களிலும் நடிக்க துவங்கினார். தமிழ் தவிர்த்து இந்தி, ஆங்கிலம் மாதிரியான படங்களில் தனுஷ் நடித்துள்ளார். இவர் எழுதி, பாடிய ‘ஒய் திஸ் கொலவெறி’ பாடல் உலக பேமஸ் ஆனது என்பதும் குறிப்பிடத்தக்கது. 

image

அதே நேரங்களில் தமிழிலும் தொடர்ந்து கவனம் செலுத்தி வருகிறார். பாடல் பாடுவது, பாடல் எழுதுவது, இயக்கம், நடிப்பு என அனைத்திலும் வல்லவராக திகழ்ந்து வரும் அவரை தமிழகம் மட்டுமல்லாது பல பகுதிகளைச் சேர்ந்தவர்களும் ட்விட்டர் சமூக வலைத்தளத்தில் பின் தொடர்ந்து வருகின்றனர். அதன் எதிரொலியே இந்த பத்து மில்லியன் ஃபாலோயர்களை அவர் பெற்றுள்ளார். 

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.