பிரிட்டன் சுகாதார அமைச்சருக்கு டெல்டா ரக கொரோனா தாக்கம்

லண்டன்: உலகம் முழுவதும் கொரோனா தாக்கம் அதிகரித்து வருகிறது. பிரிட்டனில் தற்போது கொரோனா வைரஸ் தாக்கம் படிப்படியாகக் குறைந்து வருவதை அடுத்து இன்னும் இரண்டு நாட்களில் ஊரடங்கை முழுவதுமாக நீக்க போரிஸ் ஜான்சன் அரசு முடிவெடுத்துள்ளது.

அதே சமயத்தில் பிரிட்டனில் டெல்டா ரக பரவல் அச்சம் ஏற்பட்டுள்ளது. இதனுடன் டெல்டாப் பிளஸ் கிரகமும் பரவி வருவதால் ஊரடங்கு நீட்டிக்க வேண்டும் என்று கோரிக்கை வலுக்கிறது.இதற்கு சமீபத்திய உதாரணமாக ஒரு சம்பவம் நடைபெற்றுள்ளது. பிரிட்டன் சுகாதாரத்துறை அமைச்சர் ஜாவித் தனது டிவிட்டர் பக்கத்தில் ஓர் வீடியோவை வெளியிட்டுள்ளார். அதில் பேசிய அவர், தனக்கு 2 டோஸ் தடுப்பு மருந்து செலுத்தப்பட்ட தாகவும் அதன் பின்னரும் தான் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

latest tamil news

பிரிட்டனின் முன்னாள் சுகாதாரத்துறை அமைச்சர் மேட் ஹான்காக் கொரோனா கட்டுப்பாடு களை மீறியதற்காக பதவி நீக்கம் செய்யப்பட்டார். இதனை அடுத்து ஜாவித் சில வாரங்களுக்கு முன்னரே புதிய செயலாளராக நியமிக்கப்பட்டார். நியமிக்கப்பட்ட சில வாரங்களிலேயே இவருக்கு கொரோனா தாக்கி உள்ளதால் தற்போது பிரிட்டன் சட்டப்படி இவர் 10 நாட்கள் தனிமையில் உள்ளார். பிசிஆர் பரிசோதனையில் இவருக்கு கொரோனா தாக்கம் இல்லை என்று நிரூபணம் ஆன பின்னரே இவர் நாடாளுமன்றத்திற்கு வரமுடியும்.

இவருக்கு 2 டேஸ் ஆஸ்ட்ரா செனேகா தடுப்பு மருந்து செலுத்தப்பட்டும் கொரோனா தாக்கியுள்ளது. இது டெல்டா ரக வைரஸாக இருக்கலாமென மருத்துவர்கள் கருதுகின்றனர்.

Advertisement

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.