மராட்டியத்தில் நிலச்சரிவில் சிக்கி 11 பேர் பலி

மும்பை,
மராட்டியத்தில் கடந்த ஜூன் 9-ந் தேதி மழைக்காலம் தொடங்கியது. இதில் பருவ மழை தொடங்கிய முதல் நாளே பலத்த மழையால் மும்பை நகரமே வெள்ளக்காடானது. அதன்பிறகு சில நாட்களுக்கு மழை நீடித்தது. தொடர்ந்து அவ்வ போது மழை பெய்து வருகிறது. 

இந்தநிலையில் மராட்டிய மாநிலம் செம்பூரின் பாரத் நகர் பகுதியில் திடீரென ஏற்பட்ட நிலச்சரிவு காரணமாக அந்த பகுதியில் இருந்த குடிசைகளில் சுவர் இடிந்து விழுந்ததில் 11 பேர் பலியாகினர். சம்பவ இடத்திற்கு விரைந்த தேசிய பேரிடர் பதில் படை மீட்பு நடவடிக்கையில் ஈடுபட்டு வருகிறது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.