வ்வா.. பேசலாம்.. நீ அப்டி செய்., நான் அ…,! வழிய கவர்ச்சிக்காட்டி இளைஞர்களை குறிவைத்து நூதன மோசடி.. உஷார்.!

சமூக வலைத்தளங்கள் சில நல்ல விஷயங்களுக்கு உதவி செய்தாலும், பல கேடான விஷயங்களும் அதில் நிறைந்துள்ளது. தவறுதலாக கேடான விஷயத்தை சர்க்கரை பாவு கலந்த தேன் போல எண்ணி செயல்பட்டால் அது நீரில் கரைந்து உதவாமல் செல்வதை போல, நாம் பல துயரங்களில் கரைந்து அவதிப்பட வேண்டியிருக்கும். கவர்ச்சியான, பார்த்ததும் ஆசையை தூண்டும் வகையில் வரும் விளம்பரங்கள் உங்களின் வாழ்க்கையை சீரழித்திவிடும் அல்லது பெரும் மனத்துயருக்கு உள்ளாக்கும் என்பதை உறுதி செய்வது போல ஒரு சம்பவம் நடந்துள்ளது. 

பொதுவாக, நாம் ஆபாச இணையத்தை அதிகளவு உபயோகம் செய்தாலும், செய்யாவிட்டாலும் சமூக வலைத்தளங்களை நாம் உபயோகம் செய்யும் போது 4 நல்ல விஷயங்களை பார்த்தாலும், ஒரு கேடான விஷயம் விளம்பரமாகவோ அல்லது விடியோவாகவோ வந்து நிற்கும். அதனை கண்டுகொள்ளாமல் செல்வது சாலச்சிறந்தது. மீறி, அதில் என்ன இருக்கிறது என சோதித்து பார்க்க நினைத்தால், அது நமக்கு பெரும் சோதனையை தந்துவிடும். 

அழகான பெண்களின் புகைப்படத்துடன் வளம்வரும் விதவிதமான கவர்ச்சி விளம்பரங்கள் மூலமாக இளைஞர்களின் வாழ்க்கை விபரீத பாதைக்கு செல்கிறது. ஏனெனில், பதிவு செய்யப்பட்ட காணொளிகள் அல்லது பாலியல் தொழிலில் ஈடுபடும் பெண்களை வைத்து நேரலை போல சித்தரித்து, மறுமுனையில் இளைஞரின் செயல்பாடுகளை பதிவு செய்து அவர்களை மிரட்டும் சோகம் அரங்கேறி வருகிறது. தற்போது, இதுபோன்ற பிராடு கும்பல்கள் ஒருபடி மேலே சென்று, நேரடியாக முகநூல் மெசேஞ்சர் வாயிலாக தொடர்பு கொண்டு மிரட்டும் அவலம் நடக்கிறது. 

பெண் பெயரில் முகநூலில் வரும் அழைப்புகள், குறிப்பாக முகநூலில் பிரதானமாக இருக்கும் நபர்களுக்கு வருகிறது. இந்த அழைப்பை ஏற்றால் பெண் தனது வாட்சப் எண்ணை தானாக முன்வந்து கொடுத்து, இளைஞரிடம் நிர்வாணமாக வீடியோ கால் பேசி பின்னர் அவர்களை மிரட்டும் சம்பவம் நடந்துள்ளது. மேலும், பணம் கொடுக்க மறுத்தால் முகநூலில் உள்ள அனைத்து நண்பர்களுக்கும் மொபைலின் மறுமுனையில் எடுக்கப்பட்ட விடியோவுடன் உங்களது முகபாவனை மற்றும் செயல்கள் அனுப்பப்படும் என்றும் எச்சரித்து பணம் பறிக்கப்பட்டுள்ளது. 

சென்னையில் உள்ள வில்லிவாக்கம் பகுதியை சார்ந்த இளைஞர் ஒருவருக்கு முகநூலில் பெண்ணின் பெயரில் நட்பு அழைப்பு வந்துள்ளது. அதனை ஏற்றுக்கொண்டதும் மெசெஞ்சரில் பெண் ஹாய் என்று அனுப்பியுள்ளார். சேட்டிங்க்கு சென்ற இளைஞரும் முதலில் பெண்ணின் நட்பு பேக் ஐடி வைத்திருக்கும் மர்ம நபராக இருக்கும் என்று எண்ணிக்கொள்ளவே, பெண் தனது வாட்சப் எண்ணை கொடுத்து வீடியோ கால் செய்ய கூறியுள்ளார். 

இளைஞரும் தனது அலைபேசியில் இருந்து வீடியோ கால் செய்த நிலையில், மறுமுனையில் பெண் அழைப்பை எடுத்தும் சில நொடிகளில் பேசிக்கொண்டே தனது ஆடைகளை கலைந்துள்ளார். இளைஞரும் ஆசையில் அதனை பார்த்துக்கொண்டே இருக்க, இளைஞரின் முகபாவனையை பெண் பதிவு செய்துகொண்டுள்ளார். சுமார் 2 நிமிடத்தில் வீடியோ கால் திடீரென துண்டிக்கப்பட்ட நிலையில், பெண்ணின் ஆண் நண்பர் என்ற பெயரில் இளைஞருக்கு போனில் நார்மல் காலில் தொடர்பு கொண்டு பேசியுள்ளார். 

உனது முகபாவனையை வீடியோ மற்றும் புகைப்படமாக பதிவு செய்துவிட்டேன். நீ நான் கேட்கும் பணத்தை கொடுக்கவில்லை என்றால் அதனை இணையத்தில் பதிவு செய்வேன். உனது நட்பு பட்டியலில் உள்ள அனைவருக்கும் இதனை அனுப்புவேன் என்று மிரட்டியுள்ளார். இதனை உறுதி செய்ய ஒரு ஸ்க்ரீன் ஷாட்டும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இதனைக்கண்டு அதிர்ச்சியடைந்த இளைஞர் ரூ.50 ஆயிரம் பணத்தை செலுத்தியுள்ளார். 

இதனையடுத்து, மேலும் ரூ.50 ஆயிரம் பணம் வேண்டும் என்று கூறி மிரட்டவே, தற்போது பணம் இல்லை என்று சமாளித்த இளைஞர் நாளை அனுப்புவதாகவும், ஒரு நாள் பொறுக்குமாறும் கெஞ்சி அவகாசம் வாங்கியுள்ளார். பின்னர், உடனடியாக விரைந்து சென்று சென்னை சைபர் கிரைம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இந்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர், போனில் தொடர்பு கொண்ட பெண் குஜராத்தை சார்ந்தவர் என்று உறுதி செய்துள்ளனர். 

இவர் பல நபர்களுக்கு ஆபாச வலைவீசி, அவர்களிடம் இருந்து பணம் பறித்தது உறுதியான நிலையில், பலரும் மானத்திற்கு பயந்து பணம் செலுத்தியுள்ளனர். இளைஞர் முதலில் பயந்து ரூ.50 ஆயிரம் பணம் செலுத்திவிட்டு பின்னர் சுதாரிப்பாக காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இது தொடர்பாக சைபர் கிரைம் காவல் அதிகாரிகள் தெரிவிக்கையில், ” இதனைப்போன்று பணம் பறிக்கும் சம்பவங்கள் புதியது கிடையாது. இளைஞர்கள் அதிகளவு இந்த விஷயத்தில் சிக்குகின்றனர்.

ஆபாசமாக வீடியோ காலில் உடைகளை கலைந்து பேசி பணம் பறிக்கும் பெண்கள் தமிழகத்தை சார்ந்தவர்கள் கிடையாது. வடமாநிலத்தை சார்ந்த பெண்கள் மற்றும் பாலியல் தொழிலாளர்களுக்கு முன்பணம் கொடுக்கப்பட்டு இவ்வாறு செய்து வருகின்றனர். இவர்கள் மோசடி செய்யும் பணத்தில், அவர்களுக்கும் பங்கு கிடைக்கும். சிலர் பணத்திற்காக உடலை மட்டும் தானே கட்டப்போகிறோம் என்று செய்வார்கள். சிலருக்கு இதுவே தொழில் ஆகும். தேவையில்லாத கவர்ச்சி விளம்பர அழைப்புகளை தவிர்ப்பது நல்லது ” என்று தெரிவிக்கின்றனர்.

ஆபாச வீடியோ காலில் பேசி பணம் பறிக்கும் பெண்கள் தமிழகத்தை சேர்ந்தவர்கள் கிடையாது. வடமாநிலங்களை சேர்ந்த பெண்கள்தான் இதுபோன்ற மோசடிகளை அரங்கேற்றி வருகிறார்கள். எனவே சமூக ஊடகங்களை பயன்படுத்தும்போது தேவையில்லாத அழைப்புகளை முழுமையாக தவிர்த்து விட வேண்டும்” என்று கூறினார்.

வாட்ஸ்-அப், பேஸ்புக் உள்ளிட்டவைகளில் தேவையில்லாத விளம்பரங்கள், ஆபாச இணையதள முகவரிகள் ஆகியவை வராமல் நம்மால் தடுக்க முடியும். அதற்காக செல்போன்களில் தனி வசதிகள் உள்ளன. அதனை பயன்படுத்தி ஆபாச அழைப்புகளை தடுத்து கொள்ளலாம். இதன்மூலம் மோசடி நபர்களிடம் சிக்காமல் தப்பித்துக் கொள்ள முடியும் என்றும் சைபர் கிரைம் போலீசார் தெரிவித்துள்ளனர். 

பொது எச்சரிக்கை: தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்து வருவதால், முகக்கவசம் அணிந்து தனிமனித இடைவெளியை கடைபிடியுங்கள். வெளியே சென்று வீட்டிற்குள் செல்லும் முன்னர் கை, கால்களை சுத்தம் செய்துகொள்ளுங்கள்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.