2வது டி20 போட்டி: 45 ரன்கள் வித்தியாசத்தில் பாகிஸ்தானை வீழ்த்தியது இங்கிலாந்து

லீட்ஸ், 
இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் செய்துள்ள பாகிஸ்தான் அணி தற்போது 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகிறது. முதல் டி20 போட்டியில் பாகிஸ்தான் வெற்றி பெற்று 1-0 என முன்னிலை பெற்றிருந்தது.
இந்நிலையில், இரு அணிகளுக்கு இடையிலான 2வது டி20 போட்டி லீட்சில் நேற்று நடந்தது. டாஸ் வென்ற பாகிஸ்தான் பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி முதலில் விளையாடிய இங்கிலாந்து அணி 19.5 ஓவரில் 200 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. 

இதையடுத்து, 201 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் பாகிஸ்தான் களமிறங்கியது.  20 ஓவரில் 9 விக்கெட் இழப்புக்கு 155 ரன்கள் மட்டுமே பாகிஸ்தான் எடுத்தது.  இதனால் 45 ரன்கள் வித்தியாசத்தில் இங்கிலாந்து அணி வெற்றி பெற்று தொடரை1-1 என சமன் செய்துள்ளது.
இரு அணிகளுக்கு இடையிலான 3வது மற்றும் கடைசி டி 20 போட்டி நாளை நடைபெறுகிறது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.