21 மாவட்டங்களில் உயிரிழப்பு இல்லை: தொற்று தொடர்ந்து குறைந்த நிலையில் புதிதாக 2,079 பேர் பாதிப்பு

சென்னை: தமிழகத்தில் நேற்று  புதிதாக  2,079 பேருக்கு கொரோனா தொற்று  உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில் சென்னையில் 150 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் சிகிச்சை பலனின்றி 29 பேர் உயிரிழந்துள்ள நிலையில் 21 மாவட்டங்களில் உயிரிழப்புகள் ஏதுமில்லை.  இது  குறித்து சுகாதாரத்துறை நேற்று வெளியிட்ட அறிக்கை: தமிழகத்தில் நேற்று  1,43,429 பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.  இதில் 2,079 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. நேற்று பாதிக்கப்பட்டவர்களில்  1,202 பேர் ஆண்கள், 877 பெண்கள்.  மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று  வந்தவர்களில் 2,743 பேர் நேற்று  குணமடைந்து வீடு திரும்பினர். இதுவரை  24,73,781 பேர் குணமடைந்துள்ளனர்.   இதையடுத்து மருத்துவமனைகளில் சிகிச்சை  பெறுபவர்களின் எண்ணிக்கை 27,897 ஆக  உள்ளது.  மேலும் மருத்துவமனைகளில்  சிகிச்சை பெற்று வந்த 29 பேர் நேற்று  உயிரிழந்தனர். இதில் 10 பேர் தனியார்  மருத்துவமனைகளிலும், 19 பேர் அரசு  மருத்துவமனைகளிலும் சிகிச்சை  பெற்றவர்கள். இதையடுத்து மொத்தம் 33,724 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் 21 மாவட்டங்களில் புதிதாக உயிரிழப்பு இல்லை.  நேற்றைய மொத்த பாதிப்பில் சென்னையில் 150 பேர்,  செங்கல்பட்டு 118, கோவை 220, ஈரோடு 128, சேலம் 142,  தஞ்சாவூர் 120,  திருப்பூர் 121 பேர்  பாதிக்கப்பட்டுள்ளனர். மற்ற மாவட்டங்களில் தொற்று  பாதிப்பு 100க்கும் கீழ்  குறைந்துள்ளது. தமிழகத்தில் நேற்று ஒரே  நாளில் மட்டும் 2,079  பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இவ்வாறு அந்த  அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.