SBI.. இந்த ஆவணங்களை இணைக்காவிட்டால் உங்கள் வங்கி சேவை பாதிக்கும்.. விரைவில் அப்டேட் பண்ணுங்க..!

வங்கி கணக்கு தொடங்குவது முதல், டிமேட் கணக்கைத் தொடங்கவும், வருமான வரி தாக்கல் உள்ளிட்ட பல இடங்களிலும் இன்று பான் கார்டு என்பது மிக அவசியமான ஆவணமாக பார்க்கப்படுகிறது.

ஆக இப்படி மிக முக்கியமான ஆவணங்களில் ஒன்றான உங்கள் பான் எண்ணை, ஆதாருடன் இணைக்கப்படாவிட்டால், விரைவில் வங்கி சேவைகள் மற்றும் பல நிதி பரிவர்த்தனைகளில் பிரச்சனைகள் ஏற்பட வாய்ப்புகள் உள்ளது.

புதிய ஓய்வூதிய விதிகளால் மிகுந்த மன உளைச்சல்.. சிவில் அதிகாரிகள் பிரதமர் மோடிக்கு உருக்கமான கடிதம்!

ஏனெனில் மத்திய அரசு பான் எண் மற்றும் ஆதார் எண்ணை ஒன்றாக இணைப்பதை கட்டாயமாக்கியுள்ளது. இதற்கு காலக்கெடு நிர்ணயித்த நிலையில் கொரோனா ஊரடங்கு காரணமாக பல முறை கால அவகாசம் கொடுக்கப்பட்டது.

பல முறை கால அவகாசம் நீட்டிப்பு

பல முறை கால அவகாசம் நீட்டிப்பு

முன்னதாக ஜூன் 30க்குள் இணைக்க வேண்டும் என அறிவித்திருந்த நிலையில், தற்போது வருமான வரித்துறை செப்டம்பர் 30 வரை காலக்கெடுவை நீட்டித்துள்ளது. ஆதார் உடன் இணைக்கப்படாத பான் கார்டுகள் செயல்படாதவை என்று அறிவிக்கப்படும், இதற்கு அபராதமும் விதிக்கப்படும் என்று அரசு தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றது.

என்னென்ன பாதிப்பு?

என்னென்ன பாதிப்பு?

வங்கி கணக்கு தொடங்குவது முதல் கிரெடிட் மற்றும் டெபிட் கார்டுக்கு விண்ணப்பிக்கும்போது, ஒரு டிமேட் கணக்கைத் தொடங்கவும், வருமான வரி தாக்கல், ஒரு நபர் ஒரு நாளில் 50,000 ரூபாய்க்கு மேல் பணத்தை வங்கியில் டெபாசிட் செய்தாலோ, மியூச்சுவல் ஃபண்ட் முதலீடு, கடன் பத்திரங்கள் வாங்கும் போதும் பான் விவரங்களை வழங்குவது அவசியம். இப்படி பலவறாக பல இடங்களில் பான் அவசியமான ஒன்றாக பார்க்கப்படுகிறது.

பான் கார்டு செயலற்று போகலாம்
 

பான் கார்டு செயலற்று போகலாம்

ஆக இத்தகைய முக்கிய பணிகளுக்கு அவசியமான பான் எண் செயலற்றதாகிவிட்டால், பல வங்கி சேவைகள் உட்பட முக்கிய பல சேவைகள் பாதிக்கப்படலாம். ஆக மேற்கண்ட பிரச்சனைகளை தவிர்க்க வங்கிகள் தங்கள் பான் மற்றும் ஆதார் விவரங்களை விரைவில் இணைக்குமாறு வாடிக்கையாளர்களை கேட்டு கொள்கின்றன.

ட்விட்டரில் என கருத்து?

ட்விட்டரில் என கருத்து?

இதற்கிடையில் தான் எஸ்பிஐ வங்கி ஒரு முக்கிய அறிவிப்பை ட்விட்டர் வாயிலாக வெளியிட்டுள்ளது, அதில் எங்கள் வாடிக்கையாளர்களுக்கு எந்தவொரு அசவுகாரியத்தினை தவிர்க்கவும், தடையற்ற வங்கி சேவையை தொடர்ந்து பெறவும் தங்கள் பான் எண்ணுடன், ஆதார் எண்ணை இணைக்குமாறு நாங்கள் அறிவுறுத்துகிறோம் என தெரிவித்துள்ளது.

தடையற்ற சேவையை பெறுங்கள்

தடையற்ற சேவையை பெறுங்கள்

ஆக அரசின் அறிவிப்பை ஏற்று இணைக்கப்படாவிட்டால், பான் செயலற்றதாகிவிடும், இதனால் வங்கி சேவைகள் மற்றும் சில பரிவர்த்தனைகளை மேற்கொள்ள முடியாது என எஸ்பிஐ ட்விட்டர் வாயிலாக தெரிவித்துள்ளது. ஆக எஸ்.பி.ஐ வாடிக்கையாளர்கள் வருமான வரி போர்ட்டலுக்கு சென்று பான் – ஆதார் எண்களை இணைத்து தடையற்ற வங்கி சேவைகளை பெறுமாறு அறிவுறுத்தியுள்ளது. அதெல்லாம் சரி, எப்படி ஆதார் பான் நம்பரை இணைப்பது?

மொபைல் எஸ்எம்எஸ் மூலம் இணைக்கலாம்

மொபைல் எஸ்எம்எஸ் மூலம் இணைக்கலாம்

ஆதார் எண் பான் நம்பரை எப்படி எஸ்எம்எஸ் மூலம் இணைப்பது? இதற்காக நீங்கள் உங்களது பதிவு செய்யப்பட்ட மொபைல் எண்ணில் இருந்து 567678 அல்லது 56161 என்ற எண்ணுக்கு எஸ்எம்எஸ் அனுப்புவதன் மூலம் இணைத்து கொள்ளலாம். உங்கள் மொபைல் எண்ணில் இருந்து UIDPAN 12 இலக்க ஆதார் எண் 10 இலக்க பான் நம்பரை டைப் செய்து மேற்கூறிய எண்ணுக்கு எஸ்எம்எஸ் அனுப்ப வேண்டும்.

ஆன்லைன் மூலம் எப்படி இணைப்பது?

ஆன்லைன் மூலம் எப்படி இணைப்பது?

ஆதார் மற்றும் பான் எண்ணினை இணைக்க http://incometaxindiafiling.gov.in./ என்ற இணைய பக்கத்தில் சென்று இணைக்கலாம்.

இந்த இணைய பக்கத்திற்கு சென்று, வலைதளத்தின் இடது பக்கத்தில் உள்ள ஆதார் லிங்க் என்ற ஆப்சனை கிளிக் செய்யவும்.

அதன் பின்பு உங்களின் பான் மற்றும் ஆதார் எண் உள்ளிட்ட விவரங்களை கேட்கும். அதில் உங்கள் பெயரினை பிழையில்லாமல் பதிவிட வேண்டும்.

இதனையடுத்து உங்கள் பிறந்த தேதி உள்ள ஒரு சிறிய டிக் பாக்ஸ் இருக்கும், அதனை க்ளிக் செய்ய வேண்டும்.

அதன் பிறகு அங்குள்ள captcha எண்ணினை பதிவு செய்து க்ளிக் செய்தால், பதிவு செய்யப்பட்ட உங்கள் மொபைல் எண்ணிக்கு ஒரு ஓடிபி வரும்.

இதனை பதிவு செய்த பின்னர் கடைசியாக லிங்க் ஆதார் என்பதை க்ளிக் செய்தல் வேண்டும்.

ஆதார் மையத்திலும் இணைக்கலாம்

ஆதார் மையத்திலும் இணைக்கலாம்

ஒரு வேளை உங்களுக்கு ஆன்லைனிலோ அல்லது மொபைல் எண் மூலமாக இணைக்க தெரியாவிட்டால், நேரிடையாக ஆதார் மையத்திற்கு சென்று இணைக்கலாம்.

இதற்காக Annexure-I என்ற பார்மில் தேவையான விவரங்களை பதிவு செய்து, தேவையான ஆவணங்களையும் உடன் இணைத்துக் கொடுக்க வேண்டும்.

இதற்காக உங்களிடம் கட்டணம் வசூலிக்கப்படும். இதே ஆன்லைனில் இலவசமாக இணைத்துக் கொள்ளலாம்.

எஸ்பிஐ கணக்குடன் எப்படி இணைப்பது?

எஸ்பிஐ கணக்குடன் எப்படி இணைப்பது?

அதெல்லாம் சரி எப்படி எஸ்பிஐ கணக்கில் எப்படி இணைப்பது? எஸ்பிஐ வாடிக்கையாளர்கள் https://www.onlinesbi.com/ என்ற இணைய தளத்தில் சென்று, லாகின் செய்து கொள்ளுங்கள்.

அங்கு my accounts என்பதன் கீழ் உள்ள link your Aadhaar number என்பதை கிளிக் செய்ய வேண்டும்.

அங்கு உங்களது ஆதார் எண்ணினை கொடுத்து பதிவிட்டுக் கொள்ளவும். அங்கு உங்களது மொபைல் எண்ணின் கடைசி இரு இலக்கங்கள் தெரியும். அதனை உறுதிபடுத்திக் கொள்ளுங்கள்.

எஸ்பிஐ ஏடிஎம்மில் எப்படி இணைப்பது?

எஸ்பிஐ ஏடிஎம்மில் எப்படி இணைப்பது?

எஸ்பிஐ ஏடிஎம்மில் ஸ்வைப் செய்து, உங்களது பின் நம்பரை பதிவு செய்து கொள்ளுங்கள். அதன் பிறகு மெனுவுக்கு சென்று, ஆதார் பதிவு என்பதை கிளிக் செய்து கொள்ளுங்கள்.

அதன் பிறகு உங்களது வங்கி கணக்கு சேமிப்பு கணக்கா அல்லது வேறு ஏதேனும் கணக்கா என்பதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள்.

அதன் பிறகு உங்களிடம் ஆதார் எண்ணினை பதிவிட கேட்கும். அதன் பிறகு நீங்கள் பதிவு செய்து கொள்ளவும். திரும்பவும் மறுமுறையும் பதிவு செய்ய கேட்கும். அதனை கொடுத்து பதிவு செய்த பிறகு, உங்களது மொபைல் எண்ணுக்கு மெசேஜ் வரும். அதனை கொடுத்து உறுதி செய்து கொள்ளுங்கள்.

எஸ்பிஐ எனிவேர் ஆப்-ல் எப்படி?

எஸ்பிஐ எனிவேர் ஆப்-ல் எப்படி?

எஸ்பிஐ எனிவேர் ஆப்பினை லாகின் செய்து கொள்ளுங்கள்.

அதில் requests என்பதை கிளிக் செய்து கொள்ளுங்கள். அதில் ஆதார் என்பதை கிளிக் செய்து, அதன்பிறகு ஆதார் லிங்கிங் என்பதை கிளிக் செய்து கொள்ள வேண்டும்.

பிறகு உங்களது ஆதார் எண்ணை கொடுத்து பதிவு செய்ய வேண்டும். இங்கும் உங்களது பதிவு மொபைல் எண்ணுக்கு ஒரு மெசேஜ் வரும்.

எஸ்பிஐ கிளைக்கு சென்று எப்படி மாற்றுவது?

எஸ்பிஐ கிளைக்கு சென்று எப்படி மாற்றுவது?

உங்களுக்கு அருகில் உள்ள எஸ்பிஐ வங்கிக் கிளைக்கு சென்று, உங்களது ஆதார் கார்டு ஆவணத்தினை அல்லது இ- ஆதாரினை கொடுக்கும்.

அதோடு letter of requetம் பூர்த்தி செய்து கொடுக்க வேண்டும். இதனைக் கொடுக்கும்போது, ஆதார் ஜெராக்ஸினையும் கொடுக்க வேண்டும்.

அவர்கள் அதனை உறுதிபடுத்திக் கொண்டு பதிவு செய்வர். இதனை வங்கி அப்டேட் செய்த பிறகு, பதிவு மொபைல் எண்ணுக்கு ஒரு மெசேஜ் வரும்.

பதிவாகியுள்ளதா? இல்லையா?

பதிவாகியுள்ளதா? இல்லையா?

அதெல்லாம் சரி உங்களது ஆதார் எண் வங்கிக் கணக்குடன் இணைக்கப்பட்டிருக்கிறதா? இல்லையா என்பதை எப்படி தெரிந்து கொள்வது? அதற்காக www.uidai.gov.in என்ற இணையதளத்தில் சென்று, அங்கு மை ஆதார் என்பதை கிளிக் செய்து, அங்கு ஆதார் அல்லது வங்கி கணக்கினை சரிபார்த்ததுக் கொள்ளலாம்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க
English summary

Bank alert! These facilities will not be available if you not link aadhaar – pan link by September 30. Check details

Bank latest updates.. Bank alert! These facilities will not be available if you not link aadhaar – pan link by September 30. Check details

Story first published: Sunday, July 18, 2021, 14:34 [IST]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.