அதிர்ச்சி! ஆவின் நிறுவனம் மீது குவியும் முறைகேடு புகார்கள்!!

ஆவின் நிறுவனத்தில் பணி நியமன முறைகேடு உள்ளிட்ட பல்வேறு புகார்கள் குவிந்து வரும் நிலைவில், தமிழகம் முழுவதும் 34 பொது மேலாளர்கள் அதிரடியாக பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

கடந்த ஆட்சியில் ராஜேந்திர பாலாஜி நிர்வகித்து வந்த ஆவின் நிறுவனத்தின் மீது புகார்கள் குவிந்த வண்ணம் உள்ளன. முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி மீதே தற்போதைய அமைச்சர் ஆவடி நாசர் குற்றம் சாட்டினார். ஒன்றரை டன் இனிப்பு ராஜேந்திர பாலாஜி வீட்டுக்கு அனுப்பப்பட்டதாக அவர் கூறினார்.

இந்நிலையில் பணி நியமனம் உள்ள பல்வேறு புகார்கள் ஆவின் மீது குவிந்து வருகின்றன. ஊழல் புகார், முறைகேடு காரணமாக பொது மேலாளர்கள், துணை மேலாளர்கள் உள்ளிட்ட அதிகாரிகள் இடமாற்றம் செய்யப்பட்டதாக தெரிகிறது.

குறிப்பாக ஊழல் புகாருக்குள்ளான சென்னை மார்க்கெட்டிங் பிரிவு பொது மேலாளர் ரமேஷ்குமார் விழுப்புரத்திற்கு மாற்றப்பட்டுள்ளார். பால் விநியோகம் செய்ததில் கமிஷன் பெற்று ஆவினுக்கு ரூ.45 கோடி இழப்பு ஏற்படுத்திய புகாரில் அவர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

ஆவின் நிறுவன பணி நியமன முறைகேடு குற்றச்சாட்டை அடுத்து 236 பணி நியமனங்கள் நிறுத்திவைக்கப்பட்டுள்ளனபணியிடங்களை நிரப்புவதும் தற்காலிகமாக நிறுத்திவைக்கப்பட்டுள்ளது. குற்றச்சாட்டுக்கு ஆளான பல்வேறு மாவட்ட ஆவின் உயரதிகாரிகளும் பணியிடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

newstm.in


Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.