இரு முறை தடுப்பூசி செலுத்திய பிறகும் கோவிட்டால் பிரிட்டன் சுகாதார அமைச்சர் பாதிப்பு| Dinamalar

லண்டன்,-இரண்டு ‘டோஸ்’ தடுப்பூசி போட்டும், பிரிட்டன் சுகாதார அமைச்சர் சஜித் ஜாவித், கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு உள்ளார்.

ஐரோப்பிய நாடான பிரிட்டனில் கொரோனா இரண்டாவது அலை பரவல் குறைந்து வருவதையடுத்து, நாளை முதல் கட்டுப்பாடுகளை முழுமையாக நீக்க, பிரிட்டன் அரசு முடிவு செய்துள்ளது.இந்நிலையில் பிரிட்டன் சுகாதார அமைச்சர் சஜித் ஜாவித், கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளார். இரண்டு டோஸ் தடுப்பூசி போட்டுக் கொண்ட நிலையில், வைரசால் அவர் பாதிக்கப்பட்டுள்ளார்

.இதையடுத்து சஜித், 10 நாட்கள் தன்னை தனிமைப்படுத்திக் கொண்டு உள்ளார். கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளது பற்றி, ‘டுவிட்டரில்’ வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ள ஜாவித், ‘எனக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.இரண்டு டோஸ் தடுப்பூசி போட்டுக் கொண்டதால், மிக லேசான அறிகுறிகளே உள்ளன. அனைவரும் தடுப்பூசி போட்டுக் கொள்ள வேண்டுகிறேன்’ என பதிவிட்டுள்ளார். ஜாவித்துடன் சமீப நாட்களில் தொடர்பில் இருந்தவர்கள் பரிசோதனைக்கு உட்படுத்திக் கொள்ளும்படி அறிவுறுத்தப்பட்டு உள்ளனர். தனிமையில் பிரதமர்பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன் கடந்த ஆண்டு கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு குணமடைந்தார்.தற்போது கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள சுகாதார அமைச்சர் சஜித் ஜாவித், சில நாட்களுக்கு முன் பிரதமர் ஜான்சன், நிதியமைச்சர் ரிஷி சுனக் ஆகியோரை சந்தித்து பேசியுள்ளார்.

latest tamil news

இதையடுத்து இருவரும், கொரோனா பரிசோதனை மேற்கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளனர். மேலும், தனிமைப்படுத்திக் கொள்ளும்படியும் இருவரும் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர். போரிஸ் ஜான்சன், தினமும் கொரோனா பரிசோதனை மேற்கொள்வதால், தன்னை தனிமைப் படுத்திக் கொள்ள மாட்டார் என, பிரதமர் அலுவலகம் தெரிவித்திருந்தது. இது சர்ச்சையை ஏற்படுத்தியதைத் தொடர்ந்து, பிரதமர் 10 நாட்கள் தன்னை தனிமைப் படுத்திக் கொள்வார் என, பின் மாற்றி அறிவிக்கப்பட்டது.

Advertisement

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.