கனமழையால் மும்பையில் வீடுகள் இடிந்து 24 பேர் பலி!!

மும்பையில் குறைவான நேரத்தில் பெய்த பெருமழையால் இரு வேறு இடங்களில் வீடுகள் இடிந்து 24 பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

மும்பையில் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ளது. அங்கு 6 மணி நேரத்தில் 10 சென்டி மீட்டர் மழை பெய்ததால் நகரமே வெள்ளத்தில் மிதக்கிறது. செம்பூர் பகுதியில் வீடு ஒன்று இடிந்ததில் 17 பேர் இறந்தனர். பலர் காயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

அதே போல் விக்ரோலியில் குடிசை வீடுகள் இடிந்ததில் உள்ளே இருந்த 7 பேர் உடல் நசுங்கி இறந்தனர். இறந்தவர்கள் குடும்பத்தினருக்கு பிரதமர் நரேந்திர மோடி இரங்கல் தெரிவித்துள்ளார்.

மரணமடைந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா 2 லட்சம் ரூபாயும்காயம் அடைந்தவர்களுக்கு தலா 50 ஆயிரம் ரூபாயும் பிரதமர் நிவாரண நிதியிலிருந்து வழங்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முதலமைச்சர் உத்தவ் தாக்கரேவும் இரங்கல் தெரிவித்துடன் நிவாரண நிதியும் அறிவித்துள்ளார். மும்பையில் பெய்த பெருமழை காரணமாக சாலைகள் வெள்ளக்காடாக மாறின. பொது மக்கள் வீடுகளை விட்டு வெளியே வர வேண்டாம் என மாநகராட்சி நிர்வாகம் எச்சரித்திருந்தது.

பெரும்பாலான தண்டவாளங்கள் மூழ்கியதால் புறநகர் ரயில் சேவைகளும் ரத்து செய்யப்பட்டன. நீரேற்று நிலையங்கள் மூழ்கி மோட்டார்கள் பழுதடைந்ததால் நகரின் பல பகுதிகளில் குடிநீர் வினியோகமும் பாதிக்கப்பட்டது.

newstm.in


Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.