கேரளாவில் கொரோனாவால் நேற்று 13,956 பேர் பாதிப்பு

மூணாறு : கேரளாவில் கொரோனாவால் நேற்று 13,956 பேர் பாதிக்கப்பட்டனர்.நேற்று மாலையுடன் முடிந்த 24 மணி நேரத்தில் 1,30,553 மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டதில் 13,956 பேருக்கு கொரோனா உறுதியானது.

நோய் பாதிப்பு 10.69 சதவீதமாக இருந்தது. 13,613 பேர் குணமடைந்து ‘டிஸ்சார்ஜ்’ செய்யப்பட்டனர்.கடந்த சில நாட்கள் 81 இறந்ததால், பலி எண்ணிக்கை 15, 350ஆக அதிகரித்தது. 1,25,041 பேர் மருத்துவமனைகளில் சிகிச்சையிலும், 4,05,176 பேர் வீடு உள்பட பல்வேறு பகுதிகளில் தனிமைபடுத்தப்பட்டு கண்காணிப்பிலும் உள்ளனர்.

மாவட்டம் வாரியாக நேற்று பாதிப்பு எண்ணிக்கை:மலப்புரம் -2271, கோழிக்கோடு-1666, எர்ணாகுளம்- 1555, திருச்சூர்- 1486, கொல்லம்- 1026, திருவனந்தபுரம்- 977, பாலக்காடு- 952, கண்ணுார்- 797, ஆலப்புழா-786, கோட்டயம்- 670, காசர்கோடு- 636, வயநாடு- 473, பத்தினம்திட்டா- 342, இடுக்கி-319.——-

Advertisement

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.