நவீன வசதியுடன் ஸ்மார்ட் சிலிண்டர்; இண்டேன் நிறுவனம் அறிமுகம்..!

சிலிண்டரில் எவ்வளவு கேஸ் செலவாகியிருக்கிறது, எவ்வளவு கேஸ் மீதம் இருக்கிறது என்பதை தெரிந்து கொள்ளும் விதமாக இண்டேன் நிறுவனம் புதிய வகை கேஸ் சிலிண்டர்களை அறிமுகப்படுத்தியுள்ளது. 

‘Indane Composite Cylinder’ என பெயரிடப்பட்டுள்ள இந்த சிலிண்டர்கள் ஏற்கெனவே பயன்பாட்டில் உள்ள சிலிண்டர்களை விட ஸ்மார்ட்டான சிலிண்டர் எனக் கூறப்படுகிறது.

1

அத்துடன், இந்த ஸ்மார்ட் சிலிண்டர்களில் பல சாதகங்கள் இருக்கின்றன. அதாவது, இந்த சிலிண்டர் எடை குறைவானது. எவ்வளவு கேஸ் மீதம் இருக்கிறது என தெரிந்து கொள்ள முடியும். 

எனவே, அடுத்த சிலிண்டர் வாங்குவது பற்றி எளிதாக முடிவெடுக்க முடியும். மேலும், இந்த சிலிண்டர் துருப்பிடிக்காது, தரையில் கறை ஏற்படுத்தாது என்பது இதன் கூடுதல் சிறப்பு.

முதற்கட்டமாக இந்த சிலிண்டர்கள் 5 கிலோ, 10 கிலோ எடையுடன் டில்லி, குருகிராம், ஹைதராபாத், ஃபரிதாபாத், லூதியானா ஆகிய பகுதிகளில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. விரைவில், ‘நாடு முழுவதும் இந்த சிலிண்டர் கிடைக்கும்’ என இண்டேன் நிறுவனம் தெரிவித்துள்ளது.


Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.