பஞ்சாயத்து முடிவுக்கு வந்தது: விரைவில் ஓடிடியில் வெளியாகும் கார்த்தி நரேனின் 'நரகாசூரன்'!

கார்த்திக் நரேன்
தற்போது தனுஷ் நடிப்பில் D43 படத்தை இயக்கி வருகிறார். துருவங்கள் பதினாறு திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குனராக அறிமுகமான இவர் இயக்கத்தில் இரண்டாவதாக உருவான திரைப்படம்
நரகாசூரன்
. நீண்ட காலமாக இந்தப்படம் ரிலீசாகமல் சிக்கலில் இருந்தது. இந்நிலையில் பிரச்சனைகள் தீர்ந்து ஒரு வழியாக இந்த திரைப்படம் அடுத்த மாதம் ஓடிடியில் வெளியாக உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

துருவங்கள் 16 திரைப்படத்திற்கு பிறகு கார்த்திக் நரேன் இயக்கிய திரைப்படம் நரகாசூரன். இத்திரைப்படத்தில் அரவிந்த்சாமி ஸ்ரேயா சரண், சந்தீப் கிஷன்,
ஆத்மிகா
, இந்திரஜித் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இப்படத்தை கௌதம்மேனன், கார்த்திக் நரேன், பத்ரி கஸ்தூரி ஆகியோர் இணைந்து தயாரித்துள்ளனர்.

இந்நிலையில் பல்வேறு பிரச்சனைகள் காரணமாக நீண்ட காலமாக இந்த திரைப்படம் ரிலீசாகமல் இருந்தது. பல முறை இந்தப்படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டு படம் வெளியாவது தள்ளிப்போனது. இந்நிலையில் தற்போது நரகாசூரன் படத்தின் பைனான்ஸ் பிரச்சனைகள் முழுதும் பேசி தீர்க்கப்பட்டு, ஓடிடியில் வெளியீட பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

அரசியலுக்கு சின்ன பிரேக்: படப்பிடிப்புக்கு திரும்பிய சேப்பாக்கம் தொகுதி எம்எல்ஏ!

கார்த்திக் நரேன் தற்போது தனுஷ் நடிப்பில் D43 படத்தை இயக்கி வருகிறார். இந்தப்படத்தின் முதல் கட்ட படப்பிடிப்பு ஏற்கனவே முடிவடைந்த நிலையில் தற்போது அடுத்த கட்ட படப்பிடிப்பு ஐதராபாத்தில் உள்ள ராமோஜிராவ் பிலிம் சிட்டியில் நடைபெற்று வருகிறது. அமெரிக்காவில் ஹாலிவுட் படமான தி க்ரே மேன் படத்தின் படப்பிடிப்பை முடித்துக் கொண்டு நாடு திரும்பிய தனுஷ் ஐதராபாத்தில் நடைபெறும் D43 படத்தின் படப்பிடிப்பில் கலந்து கொண்டார்.

இந்தப்படத்தில் தனுஷ் ஜோடியாக மாளவிகா மோகனன் நடித்துள்ளார். இவர்களுடன் சமுத்திரகனி, காளி வெங்கட், மாஸ்டர் மகேந்திரன் உள்பட பலர் நடித்து வருகின்றனர். ஜிவி பிரகாஷ் இசையில் உருவாகி வரும் இந்தப் படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு தற்போது நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் நரகாசூரன் திரைப்படம் ஓடிடியில் ரிலீசாக உள்ளதாக வெளியாகியுள்ள தகவல், இந்தப்படத்திற்காக நீண்ட காலமாக காத்திருக்கும் ரசிகர்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.