முன்னணி நடிகைகளை ஓரங்கட்டிய ரஷ்மிகா மந்தனா!!

பிரபல தென்னிந்திய நடிகையான ரஷ்மிகா மந்தனா இன்ஸ்டாகிராமில் சமந்தா, காஜல் அகர்வால் ஆகியோரை பின்னுக்கு தள்ளி 19 மில்லியன் ஃபாலோவர்களுடன் முதலிடத்தில் உள்ளார்.

தெலுங்கில்கீதா கோவிந்தம்படத்தின் மூலம் இந்தியா முழுக்க கவனம் ஈர்த்தார் ரஷ்மிகாஅதனாலேயே நேஷனல் க்ரஷ்ஷாக மாறியிருக்கிறார் இவர். ரஷ்மிகா மந்தனா தற்போது பாலிவுட் படங்களில் கவனம் செலுத்தி வருகிறார். விரைவில் இவரது நடிப்பில் அல்லு அர்ஜுனின்புஷ்பாவெளியாகவிருக்கிறது

இன்ஸ்டாகிராமில் தென்னிந்திய நடிகைகளில் அதிக ஃபாலோயர்ஸ் எண்ணிக்கைக் கொண்ட நடிகைகளில் காஜல் அகர்வால் முன்னிலையில் இருந்தார். அவரைத்தொடர்ந்து, நடிகை ஸ்ருதிஹாசன், ரகுல் ப்ரித் சிங், சமந்தா உள்ளிட்டோர் இருந்தனர்.

இந்நிலையில், அனைவரையும் பின்னுக்குத் தள்ளி 19 மில்லியன் 20 ஆயிரம் ஃபாலோயர்ஸ்களைப் பெற்றுள்ளார் ரஷ்மிகா மந்தனா. முதல் இடத்தில் இருந்த காஜல் அகர்வாலுக்கு சரியாக 19 மில்லியன் ஃபாலோயர்ஸ்கள் உள்ளனர்.

சமந்தா 17 மில்லியன் 50 ஆயிரம் ஃபாலோயர்ஸ்களும், ரகுல் ப்ரீத் சிங் 17 மில்லியன் 20 ஆயிரம் ஃபாலோயர்ஸ்களையும், ஸ்ருதிஹாசன் 17 மில்லியன் ஃபாலோயர்ஸ்களையும் அடுத்தடுத்து கொண்டுள்ளனர். ரஷ்மிகா தமிழில் சுல்தான் படத்தில் நடித்திருந்தார்.

தற்போது பாலிவுட்டிலும் பிஸியான நடிகையாக மாறிவிட்டார் ரஷ்மிகா மந்தனா. அங்கு அமிதாப் பச்சன், சித்தார்த் மல்ஹோத்ரா ஆகியோருடன் நடித்து வருகிறார். இவரது கைவசம் ஏராளமான படங்கள் உள்ளன.

மேலும் விஜய்யின் அடுத்த படத்தில் இவர் ஹீரோயினாக நடிக்க வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.

newstm.in


Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.