விஜய்யின் சொகுசு கார் விவகாரம் : இன்று விசாரணை!!

சொகுசு கார் வழக்கில் விதிக்கப்பட்ட அபராதம் மற்றும் விமர்சனங்களை நீக்கக்கோரி நடிகர் விஜய் தாக்கல் செய்த மேல் முறையிட்டு மனு சென்னை உயர்நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வருகிறது.

நடிகர் விஜய் இறக்குமதி செய்த சொகுசு காருக்கு நுழைவு வரியிலிருந்து விலக்குகோரிய வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்ட தனி நீதிபதி எஸ்.எம்.சுப்பிரமணியம், பல்வேறு கருத்துகளை கூறியிருந்தார்.

குறிப்பாக நடிகர்கள் ரீல் ஹீரோவாக இல்லாமல் ரியல் ஹீரோவாக இருக்க வேண்டும் எனவும் தெரிவித்திருந்தார். திரையில் சமூக நீதிக்காக போராடும் நடிகர் நிஜ வாழ்க்கையில் அப்படி இல்லாமல் இருப்பது ஏன் என நீதிபதி கேள்வி எழுப்பியிருந்தார்.

அதனைத் தொடர்ந்து நடிகர் விஜய்க்கு ஆதரவாகவும், எதிராகவும் பலரும் கருத்து தெரிவித்து வந்தனர். இந்நிலையில் நடிகர் விஜய் உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு மனு தாக்கல் செய்தார்.

அதில், ஒரு லட்சம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டதை எதிர்த்தும், தீர்ப்பில் தன்னைப் பற்றி குறிப்பிட்டுள்ள விமர்சனங்களை நீக்கவும் கோரிக்கை விடுத்திருந்தார். அந்த மேல்முறையீடு மனு இன்று விசாரணைக்கு வருகிறது.

newstm.in


Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.