வேவு பார்க்கப் பயன்படுத்தப்படும் பெகாசஸ் ஸ்பைவேர்.! எப்படி செயல்படுகிறது?

அண்மையில் வெளிவந்த தகவலின்படி, பெகாசஸ் என்ற ஸ்பைவேர் மூலம் இந்தியாவில் உள்ள பத்திரிகையாளர்கள், முக்கிய அமைச்சர்கள், எதிர்க்கட்சி தலைவர்கள் என பலரின் செல்போன் ஓட்டு கேட்கப்பட்டதாகச் செய்திகள் வெளியாகியுள்ளன. மேலும் இது சார்ந்த விவரங்களை சற்று விரிவாகப் பார்ப்போம் .

ஸ்பைவேர் என்பது ஒருவருக்கு

அதாவது ஸ்பைவேர் என்பது ஒருவருக்கு தெரியாமல் அவரை வேவு பார்க்கப் பயன்படுத்தப்படும் ஒரு மென்பொருள் என்று கூறப்படுகிறது. இஸ்ரேலை தலைமையிடமாகக் கொண்டு இயங்கி வரும் என்எஸ்ஒ எனும் நிறுவனம் தான் இந்த பெகாசஸ் என்ற ஸ்பைவேரை உருவாக்கியுள்ளதாக கூறப்படுகிறது.

பெகாசஸ் போன்ற ஸ்பைவேர்

பெகாசஸ் போன்ற ஸ்பைவேர் உங்களுக்குத் தெரியாமல், உங்கள் சாதனத்திற்கான அணுகலைப் பெற வடிவமைக்கப்பட்டுள்ளது. குறிப்பாக தனிப்பட்ட தகவல்களைச் சேகரித்து உளவு பார்க்க பயன்படும் ஒரு மென்பொருள் ஆகும்.

சந்திரன் சந்திரன் “தள்ளாட்டம்”.. 2030-களில் கடலோரம் இப்படியொரு பிரச்சனை வருமா? நாசா திடுக்கிடும் தகவல்.!

தகவலின்படி உலகில் இருக்கும் ச

வெளிவந்த தகவலின்படி உலகில் இருக்கும் சமூக உரிமை ஆர்வலர்கள், ஊடகவியலாளர்கள், வழக்கறிஞர்களின் செல்போன் இஸ்ரேலின் பெகாசஸ் என்ற ஸ்பைவேர் மூலம் ஒட்டுக் கேட்கப்பட்டு, அவர்களின் தகவல்கள் அரசிடம் விற்கப்பட்டுள்ளது. குறிப்பாக அதில் இந்தியாவை
சேர்ந்த 40 பத்தரிக்கையாளர்கள் உட்பட பலர் அடங்கியுள்ளனர் என்று தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பெகாசஸ் ஸ்பைவேர் ஆண்ட்ராய்டு,

குறிப்பாக பெகாசஸ் ஸ்பைவேர் ஆண்ட்ராய்டு, ஐபோன்களை கண்காணித்து அதில் இருக்கும் முக்கிய மின்னஞ்சல்கள்,மேசேஜ்கள், அழைப்புகள்
என அனைத்தையும் உளவு பார்த்து ஒட்டு கேட்கிறது. பின்பு தாக்குதலுக்கு உள்ளான மொபைலின் மைக்ரோபோன்களையும் இதனால் ரகசியமாக இயக்க முடியும் என்று கூறப்படுகிறது.

ண்காணிப்புக்கு உள்ளானவர்கள் குறித்த

மேலும் கண்காணிப்புக்கு உள்ளானவர்கள் குறித்த கூடுதல் விவரங்கள் வரும் நாட்களில் வெளியாகும் என்று தகவல் வெளிவந்துள்ளது. மேலும் உலகம் முழுவதும் பல அரசுகளுக்கு பெகாசஸ் தொழில்நுட்பத்தை இந்த என்எஸ்ஒ நிறுவனம் விற்பனை செய்துள்ளதாக கூறப்படுகிறது.

 தீவிரவாதிகள், சதித்திட்டம்

அதிலும் தீவிரவாதிகள், சதித்திட்டம் தீட்டுபவர்களை உளவு பார்ப்பதற்காக மட்டுமே தான் இந்த தொழில்நுட்பத்தை கொடுக்கிறோம் என்றும், இதில் மனித உரிமை மீறல்களை அரசு மேற்கொள்ள கூடாது என்று உத்தரவாதம் வாங்கி கொண்டு மட்டுமே பெகாசஸ் நுட்பத்தை விற்பனை செய்கிறோம் என்றும் என்எஸ்ஒ நிறுவனம் தகவல் தெரிவித்துள்ளது.

அல்லது உங்களது சாதனத்தி

இது எப்படி செயல்படுகிறது என்றால், பெகாசஸ் ஸ்பைவேர் உங்களது போனில் இருக்கும் பக்ஸ் மூலம் உள்ளே நுழையும் அல்லது உங்களது சாதனத்திற்கு வரும் லிங்ஸ் எதையாவது கிளிக் செய்தால் எளிமையாக உள்நுழைந்துவிடும்.

ந்த பெகாசஸ் உங்களது ஆண்ட்ராய்டு

பின்பு இந்த பெகாசஸ் உங்களது ஆண்ட்ராய்டு அல்லது ஐஒஎஸ் மொபைல் சாதனங்களில் நுழைந்த பின் அதன் மூலம் உங்களது மொபைல்போனை ஒட்டுகேட்டக முடியும்,உங்களது மெசேஜ்களை எளிமையாக படிக்க முடியும். மேலும் இதன் மூலம் கேமரா, மைக்கை உங்களுக்கு தெரியாமலே இயக்க முடியும் என்று கூறப்படுகிறது. அதேபோல் நீங்கள் எங்கு செல்கிறீர்கள் என்பதை உங்களது ஜிபிஎஸ்-ஐ இயக்கி கண்காணிக்க முடியும் என்று கூறப்படுகிறது.

 உலகம் முழுவதும் சுமார் 5000

அதேபோல் உலகம் முழுவதும் சுமார் 5000 நபர்களின் தொலைபேசி எண்களை பெகாசஸ் டேட்டா பேஸில் இருந்து Forbidden Stories என்ற பிரான்ஸ் ஊடகம் கைப்பறி உள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது. அதிலும் இந்தியாவில் மட்டும் மொத்தம் 300-க்கு மேற்பட்ட நபர்களின் எண்கள் அந்த லிஸ்டில் இருந்துள்ளது.

English summary
Pegasus spyware used to spy! How does it work? Read more about this in Tamil GizBot

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.