அரசு அதிரடி அறிவிப்பு; தடுப்பூசி போடாத ஊழியர்களுக்கு கட்டாய விடுப்பு..!

கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொள்ளாத ஊழியர்களுக்கு கட்டாய விடுப்பு அளிக்கப்படும் என அரசு அறிவித்துள்ளது.

கொரோனா நோய்த் தொற்று பரவலை தடுக்கும் ஒரே ஆயுதமாக தடுப்பூசி இருந்து வருகிறது. இந்நிலையில், தடுப்பூசி செலுத்துவது குறித்து பல்வேறு விழிப்புணர்வுகளையும், எச்சரிக்கைகளையும்  மத்திய – மாநில அரசுகள் வெளியிட்டு வருகின்றனர்.

அந்த வகையில் இன்று (10ம் தேதி), முதல் தவணை கொரோனா தடுப்பூசிகூட செலுத்திக் கொள்ளாத அரசு ஊழியர்களுக்கு, செப்டம்பர் 15ம் தேதி முதல் கட்டாய விடுப்பு அளிக்கப்படும். ஆனால், மருத்துவ காரணங்களுக்காக தடுப்பூசி செலுத்திக் கொள்ளாதவர்களுக்கு இது பொருந்தாது என, பஞ்சாப் மாநில அரசு அறிவித்துள்ளது.


Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.