ஆந்திராவைப் போல் தமிழகத்திலும் செயல்படுத்தவும்: நடிகர் விஷால் முதல்வரிடம் கோரிக்கை

தமிழ்நாட்டில், கொரோனா பரவல் காரணமாக பல மாதங்களாக மூடப்பட்டிருந்த தியேட்டர்கள், தற்போது மொத்த இருக்கை எண்ணிக்கையில் 50% பார்வையாளர்களுக்கு அனுமதி அளித்து தியேட்டர்கள் திறக்கப்பட்டுள்ளன. தொற்றூ பரவல் பாதிப்பு குறைந்துள்ளதை அடுத்து பல விதமான தலர்வுகள் அறிவிக்கப்பட்ட நிலையில், தியேட்டர்களும் திறக்கப்பட்டுள்ளன

இந்நிலையில், ஆந்திராவில் உள்ள திரையரங்குகளுக்கான ஆன்லைன் முன்பதிவு முறையை செயல்படுத்த ஆந்திர பிரதேச முதலமைச்சர் அனுமதி அளித்துள்ளதற்கு, முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டியை பாராட்டியுள்ள நடிகர் விஷால், இந்த முறையை தமிழ்நாட்டிலும் செயல்படுத்த வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளார். இது குறித்து அவர் ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.

எனினும், இந்தியாவில் இன்னும் இரண்டாவது அலை முழுமையாக கட்டுக்குள் வரவில்லை என மத்திய அரசு எச்சரித்துள்ள நிலையிலும், மூன்றாவது அலை குறித்த அச்சம் நிலவுவதாலும், விஷாலின் கோரிக்கை ஏற்கப்படுமா என்பொஅதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும். 

ALSO READ: வேகமெடுக்கும் கொரோனா பரவல்: எச்சரிக்கும் சுகாதாரத் துறை

இன்று தமிழ்நாட்டில் 1,631 பேர் புதிதாக கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டனர். இதனுடன் தமிழகத்தில் இதுவரை தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை  26,30,592 ஆக உயர்ந்துள்ளது. சென்னையில் மட்டும் இன்று 186 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. 

ALSO READ: 1 கோடி டோஸ் கூடுதல் தடுப்பூசிகள் தேவை: மத்திய அமைச்சருக்கு மா.சுப்பிரமணியன் கடிதம்

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.