இன்று ஞாயிற்றுக்கிழமை அட்டவணைப்படி மின்சார ரெயில் சேவைகள் இயக்கம்

சென்னை:
சென்னை ரெயில்வே கோட்டம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:
நாடு முழுவதும் விநாயகர் சதுர்த்தி இன்று (10-ம் தேதி) கொண்டாடப்படுவதால் தேசிய விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. தேசிய விடுமுறையான இன்று மூர்மார்க்கெட்-அரக்கோணம், மூர்மார்க்கெட்-சூலூர்ப்பேட்டை, சென்னை கடற்கரை-செங்கல்பட்டு, சென்னை கடற்கரை-வேளச்சேரி மார்க்கங்களில் இயக்கப்படும் மின்சார ரெயில்கள் ஞாயிற்றுக்கிழமை கால அட்டவணைப்படி இயக்கப்படும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.