குழந்தை பெற்றுக் கொடுப்பது பெண்களின் கடமை: தலிபான்| Dinamalar

காபூல்:”குழந்தைகளை பெற்றுக் கொடுக்க வேண்டியது தான் ஆப்கன் பெண்களின் கடமை,” என, தலிபான் செய்தித் தொடர்பாளர் சையது ஜெக்ருல்லா ஹஷிமி கூறியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

தெற்காசிய நாடான ஆப்கானிஸ்தானில் தலிபான் அமைப்பினர் ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றி உள்ளனர். இதனால் இங்குள்ள மக்கள் உயிருக்கு அஞ்சி நாட்டை விட்டு வெளியேறி வருகின்றனர். இதற்கிடையே, தலிபான் அறிவித்த அமைச்சரவையில் ஒரு பெண் கூட இடம்பிடிக்கவில்லை. இது பெண்கள் மீதான தலிபானின் மனநிலையை வெளிச்சம் போட்டு காட்டும் வகையில் அமைந்திருந்தது.

இந்நிலையில், தலிபான் அமைப்பின் செய்தித் தொடர்பாளர் சையது ஜெக்ருல்லா ஹஷிமி நேற்று ஒரு தனியார் செய்தி நிறுவனத்துக்கு பேட்டி அளித்தார்.அப்போது ஆப்கன் பெண்கள் குறித்து அவர் கூறியதாவது:ஒரு பெண்ணால் அமைச்சராக முடியாது. பெண்ணுக்கு கழுத்தில் அணியும் ஆபரணம் போல் அமைச்சர் பதவி வழங்க வேண்டும் என நீங்கள் நினைக்கிறீர்கள். எனினும், பெண்களால் அமைச்சர் பதவியின் பொறுப்புகளை சுமக்க முடியாது.

அவர்களுக்கு அமைச்சரவையில் இடம் அளிக்க வேண்டும் என்பது தேவையில்லாத சர்ச்சை. குழந்தைகளை பெற்றுக் கொடுக்க வேண்டியது தான் அவர்களின் கடமை.குழந்தைகளை பெற்றெடுத்து அவர்களுக்கு இஸ்லாமிய நெறிமுறைகளை கற்பிக்க வேண்டி யது தான் ஆப்கன் பெண்களின் பணி.இவ்வாறு அவர் கூறினார்.தலிபான் அமைப்பின் இந்த அறிக்கை தற்போது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

Advertisement

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.