சென்னை, கோவை, மதுரையில் ஒரு சவரன் தங்கம் விலை எவ்வளவு.. இன்று வாங்கலாமா..!?

சமீபத்திய தினங்களாக தங்கம் விலையானது சரிவினைக் கண்டு வந்த நிலையில், இன்று சற்று அதிகரித்திருந்தாலும், சமீபத்திய உச்சத்தோடு பார்க்கும்போது தங்கம் விலை சற்று குறைவானதாகவே உள்ளது. அதிலும் விநாயகர் சதுர்த்தி தினமான இன்று, தங்கம் வாங்க இது நல்ல நாளாகவே பார்க்கப்படுகிறது.

இன்று விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு இந்திய எம்சிஎக்ஸ் சந்தைக்கு விடுமுறை என்பதால், மாலை அமர்வில் தங்கம் விலையில் சர்வதேச சந்தையின் எதிரொலி இருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆக வர்த்தகர்கள் சற்று கவனமுடன் வர்த்தகம் செய்வது நல்லது.

எனினும் சர்வதேச சந்தையினை பொறுத்தவரையில் தங்கம் விலையானது சற்று குறைந்தே காணப்படுகின்றது. இதன் எதிரொலி மாலை அமர்வில் இந்திய சந்தையில் இருக்குமா? விலை இன்னும் குறையுமா? அடுத்து என்ன செய்யலாம், ஆபணரத் தங்கம் மற்றும் வெள்ளியின் விலை நிலவரம் என்ன? நிபுணர்களின் கணிப்பு என்ன வாருங்கள் பார்க்கலாம்.

விநாயகர் சதுர்த்தி.. இன்று பங்கு சந்தைகளுக்கு விடுமுறை.. எம்சிஎக்ஸில் மாலை அமர்வு உண்டு..!

சர்வதேச சந்தையில் தங்கம் நிலவரம்

சர்வதேச சந்தையில் தங்கம் நிலவரம்

சர்வதேச சந்தையில் தங்கம் விலையானது பெரியளவில் மாற்றமில்லாவிட்டாலும், சற்று சரிவினைக் கண்டுள்ளது. இது தற்போது அவுன்ஸூக்கு அரை டாலர் குறைந்து, 1799.45 டாலர்களாக வர்த்தகமாகி வருகின்றது. இது முந்தைய அமர்வின் முடிவு விலையினை விட, இன்று காலை தொடக்கத்தில் சற்று குறைந்து தான் தொடங்கியுள்ளது. எனினும் உச்சம், குறைந்த விலை என எதனையும் உடைக்கவில்லை. எப்படியிருப்பினும் மீடியம் டெர்மில் சற்று குறையும் விதமாகவே காணப்படுகின்றது.

சர்வதேச சந்தையில் வெள்ளி விலை நிலவரம்

சர்வதேச சந்தையில் வெள்ளி விலை நிலவரம்

இதே வெள்ளை தங்கமான வெள்ளியின் விலையானது சற்று அதிகரித்தே காணப்படுகின்றது. இது தற்போது சற்று அதிகரித்து, அவுன்ஸூக்கு 24.247 டாலர்களாக காணப்படுகின்றது. வெள்ளி விலையும் முந்தைய அமர்வின் முடிவினை விட, இன்று சற்று கீழாகத் தான் தொடங்கியுள்ளது. ஆக மீடியம் டெர்மில் தற்போது அதிகரித்திருந்தாலும், மீண்டும் குறையலாம் என்ற நிலையே இருந்து வருகின்றது.

இந்திய கமாடிட்டி சந்தை நிலவரம்
 

இந்திய கமாடிட்டி சந்தை நிலவரம்

இன்று விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு இந்திய எம்சிஎக்ஸ் சந்தைக்கு விடுமுறை என்பதால், மாலை அமர்வில் தங்கம் விலையில் எதிரொலி இருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த அமர்விலேயே தங்கம் மற்றும் வெள்ளியின் விலையானது சற்று சரிவில் முடிவடைந்ததையடுத்து சற்று சரிவில் காணப்பட்டது. டெக்னிக்கலாகவும் சற்று சரிவில் காணப்பட்டது. இதன் எதிரொலியாக இந்திய சந்தையிலும் மாலை அமர்வில் சற்று சரியும் விதமாகவே காணப்படுகின்றது.

சென்னையில் ஆபரணத் தங்கம் விலை

சென்னையில் ஆபரணத் தங்கம் விலை

சென்னையில் ஆபரண தங்கத்தின் விலையானது தொடர்ந்து 4 தினங்களாகவே சரிந்து வந்த நிலையில், இன்று சற்று அதிகரித்து காணப்படுகிறது. ஒரு கிராம் (22 கேரட் ) தங்கத்தின் விலையானது 17 ரூபாய் அதிகரித்து, 4,451 ரூபாயாகவும், இதே சவரனுக்கு 136 ரூபாய் அதிகரித்து, 35,608 ரூபாயாக விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இது தொடர்ந்து 35,000 ரூபாய்க்கு மேலாகவே காணப்படுகிறது.

தூய தங்கம் விலை

தூய தங்கம் விலை

சென்னையில் இன்று தூய தங்கத்தின் விலையும் சற்று அதிகரித்து காணப்படுகிறது. ஒரு கிராம் (24 கேரட்) தங்கத்தின் விலையானது 19 ரூபாய் அதிகரித்து, 4,856 ரூபாயாகவும், இதே சவரனுக்கு 152 ரூபாய் அதிகரித்து, 38,848 ரூபாயாகவும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

ஆபரண வெள்ளி விலை

ஆபரண வெள்ளி விலை

சென்னையில் ஆபரண வெள்ளி விலையினை பொறுத்தவரையில் சற்று அதிகரித்து காணப்படுகிறது. இன்று கிராமுக்கு 20 பைசா அதிகரித்து, 68.50 ரூபாயாகவும், இதே கிலோவுக்கு 68,500 ரூபாயாகவும் காணப்படுகிறது. கடந்த சில நாட்களாகவே வெள்ளி விலையானது தடுமாற்றத்தில் இருந்த நிலையில், இன்று பெரியளவில் மாற்றமின்றி காணப்படுகின்றது.

கோயமுத்தூர் தங்கம் விலை

கோயமுத்தூர் தங்கம் விலை

கோயம்புத்தூரில் இன்றைய தங்கம் மற்றும் வெள்ளி விலை

22 கேரட் தங்கம் விலை (8 கிராம் / ஒரு சவரன்): 35,608 ரூபாய்

24 கேரட் தங்கம் விலை (10 கிராம்) : 48,560 ரூபாய்

வெள்ளி விலை (1 கிலோ): 68,500 ரூபாய்

மதுரை தங்கம் விலை

மதுரை தங்கம் விலை

மதுரையில் இன்றைய தங்கம் மற்றும் வெள்ளி விலை

22 கேரட் தங்கம் விலை (8 கிராம் / ஒரு சவரன்): 35,608 ரூபாய்

24 கேரட் தங்கம் விலை (10 கிராம்) : 48,560 ரூபாய்

வெள்ளி விலை (1 கிலோ): 68,500 ரூபாய்

மும்பை தங்கம் விலை

மும்பை தங்கம் விலை

மும்பையில் இன்றைய தங்கம் மற்றும் வெள்ளி விலை

22 கேரட் தங்கம் விலை (8 கிராம் / ஒரு சவரன்): 36,792 ரூபாய்

24 கேரட் தங்கம் விலை (10 கிராம்) : 46,990 ரூபாய்

வெள்ளி விலை (1 கிலோ): 64,200 ரூபாய்

சேலம் தங்கம் விலை

சேலம் தங்கம் விலை

சேலத்தில் இன்றைய தங்கம் மற்றும் வெள்ளி விலை

22 கேரட் தங்கம் விலை (8 கிராம் / ஒரு சவரன்): 36,792 ரூபாய்

24 கேரட் தங்கம் விலை (10 கிராம்) : 46,990 ரூபாய்

வெள்ளி விலை (1 கிலோ): 64,200 ரூபாய்

கொல்கத்தா தங்கம் விலை

கொல்கத்தா தங்கம் விலை

கொல்கத்தாவில் இன்றைய தங்கம் மற்றும் வெள்ளி விலை

22 கேரட் தங்கம் விலை (8 கிராம் / ஒரு சவரன்): 37,224 ரூபாய்

24 கேரட் தங்கம் விலை (10 கிராம்) : 49,230 ரூபாய்

வெள்ளி விலை (1 கிலோ): 64,200 ரூபாய்

கேரளா தங்கம் விலை

கேரளா தங்கம் விலை

கேரளாவில் இன்றைய தங்கம் மற்றும் வெள்ளி விலை

22 கேரட் தங்கம் விலை (8 கிராம் / ஒரு சவரன்): 35,280 ரூபாய்

24 கேரட் தங்கம் விலை (10 கிராம்) : 48,110ரூபாய்

வெள்ளி விலை (1 கிலோ): 68,500 ரூபாய்

புவனேஷ்வர் தங்கம் விலை

புவனேஷ்வர் தங்கம் விலை

புவனேஷ்வரில் இன்றைய தங்கம் மற்றும் வெள்ளி விலை

22 கேரட் தங்கம் விலை (8 கிராம் / ஒரு சவரன்): 36,704 ரூபாய்

24 கேரட் தங்கம் விலை (10 கிராம்) : 48,080 ரூபாய்

வெள்ளி விலை (1 கிலோ): 64,200 ரூபாய்

பெங்களூர் தங்கம் விலை

பெங்களூர் தங்கம் விலை

பெங்களூரில் இன்றைய தங்கம் மற்றும் வெள்ளி விலை

22 கேரட் தங்கம் விலை (8 கிராம் / ஒரு சவரன்): 35,280 ரூபாய்

24 கேரட் தங்கம் விலை (10 கிராம்) : 48,110 ரூபாய்

வெள்ளி விலை (1 கிலோ): 64,200 ரூபாய்

மங்களூர் தங்கம் விலை

மங்களூர் தங்கம் விலை

மங்களூரில் இன்றைய தங்கம் மற்றும் வெள்ளி விலை

22 கேரட் தங்கம் விலை (8 கிராம் / ஒரு சவரன்): 35,280 ரூபாய்

24 கேரட் தங்கம் விலை (10 கிராம்) : 48,110 ரூபாய்

வெள்ளி விலை (1 கிலோ): 64,200 ரூபாய்

ஹைதராபாத் தங்கம் விலை

ஹைதராபாத் தங்கம் விலை

ஹைதராபாத்தில் இன்றைய தங்கம் மற்றும் வெள்ளி விலை

22 கேரட் தங்கம் விலை (8 கிராம் / ஒரு சவரன்): 35,280 ரூபாய்

24 கேரட் தங்கம் விலை (10 கிராம்) : 48,110 ரூபாய்

வெள்ளி விலை (1 கிலோ): 68,500 ரூபாய்

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க
English summary

Gold price today September 10th, 2021: check gold rate in Chennai, Coimbatore, Madurai,

Gold price latest updates.. Gold price today September 10th, 2021: check gold rate in Chennai, Coimbatore, Madurai,

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.