செப்: 10 – தங்கம் விலை சவரனுக்கு ரூ.144 உயர்வு

சென்னை, செப். 10–

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.144 அதிகரித்து, ரூ.35,608 க்கு விற்பனையாகிறது.

சென்னையில் ரூ.36 ஆயிரத்துக்கு மேல் விற்கப்பட்டு வந்த தங்கம் விலை, கடந்த மாத தொடக்கத்தில் அதிரடியாக சரிந்தது. விலை ஒரு சில நாட்களிலேயே ரூ.34 ஆயிரத்துக்குக் கீழ் சென்றது. சாமானிய மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். பின்னர், அடுத்தடுத்த வாரங்களில் தங்கம் விலை மீண்டும் அதிகரித்து தற்போது ஏற்ற, இறக்கத்தை சந்தித்து வருகிறது.

இன்றைய நிலவரப்படி சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.18 அதிகரித்து ரூ.4,451க் கு விற்பனையாகிறது. அதன்படி, சவரனுக்கு ரூ.144 அதிகரித்து ரூ.35,608 க்கு விற்பனையாகிறது. மேலும், வெள்ளி விலை எந்த மாற்றமும் இன்றி ஒரு கிராம் வெள்ளி ரூ.68.50 க்கும் ஒரு கிலோ வெள்ளி ரூ.68,500 க்கும் விற்பனையாகிறது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.